நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி தனது ஃபிட்னஸ் கவலைகள் மற்றும் வேலைப்பளு குறித்துப் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தொடர்ச்சியாகக் காயங்களைச் சந்தித்து வரும் இளம் வீரரான அவர், தனது உடற்தகுதியை மேம்படுத்த தீவிரமாக உழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, பவுலிங்கில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன், பேட்டிங்கில் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்ததிலிருந்து பலமுறை காயங்களால் அவதிப்பட்ட அவர், தனது பணிச்சுமை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு ஆல்ரவுண்டராகத் தன் மீது கூடுதல் பொறுப்பு இருப்பதாகவும், தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பாக எதிர்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்ட அந்த இளம் வீரர், தனது காயப் பிரச்சினைகள் மற்றும் பவுலிங் அனுபவம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் ரெட்டி பேசும்போது, *”இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் அங்கம். நான் ஒரு ஆல்ரவுண்டர், அதனால் நான் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையும் செய்ய வேண்டும். பயிற்சி செஷன்களிலும் கூட நான் எனது வொர்க்லோட்களைச் செய்ய வேண்டும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற எங்களை விட எனக்கு கூடுதல் வேலை உள்ளது. நான் வேலை செய்து வரும் விஷயம் இதுதான். யாருக்கும் காயமடையப் பிடிக்காது”
“நான் இந்திய அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஒரு நேரத்தில் ஒரு நாளை எடுத்துக்கொள்கிறேன். அடுத்த நாள் நான் என் அணிக்காக வந்து ஒரு விளையாட்டை விளையாடினால், நான் எங்கு விளையாடினாலும் அது ஒரு சிறந்த அறிகுறியாக இருக்கும். எனக்குக் காயம் ஏற்படாது என்று நம்புகிறேன், ஆனால் நான் இன்னும் அந்தச் செயல்முறையில்தான் இருக்கிறேன்”* என்று கூறி இருக்கிறார்.






