இந்திய கிரிக்கெட்

விராட் கோலியின் ரிட்டயர்மெண்ட்டை கணக்கு போட்டேன்.. ஆனா உதவி செய்வது இவர்தான் – நிதீஷ் குமார் ரெட்டி பேட்டி

இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி விராட் கோலி குறித்து மிகவும் உணர்வுபூர்வமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மிக வேகமாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணிக்கு முக்கியமான ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

விராட் கோலியின் ரிட்டயர்மென்ட்

இது குறித்து நிதீஷ் குமார் ரெட்டி கூறும் பொழுது “நான் சிறு வயது முதலே விராட் கோலி பையாவின் தீவிரமான ரசிகன். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் பார்ப்பேன். எனவே அவர் சதம் அடித்தால் நான் அதை கொண்டாடுவேன். மேலும் அவருடைய கொண்டாட்ட முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. அப்போது நான் இந்திய அணிக்கு அறிமுகமாகும் போது விராட் கோலி ஓய்வு பெற்று விடுவாரா? என்று என்னுடைய வயதை வைத்து கணக்கு போட்டு பார்ப்பேன்”

“முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பையா சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது 10 ரன்கள் இருக்கிறது இன்னும் 5 ரன்கள் இருக்கிறது என்று நான் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். நான் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருப்பதையே மறந்து விட்டேன். பிறகு அவர் சதம் அடித்த பொழுது எனக்கு அது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது”

- Advertisement -

இவர்தான் எனக்கு உதவுகிறார்

“எனக்கு ஆரம்பத்தில் இந்திய அணியில் வீரர்களுடன் எப்படி பழகுவது? என்கின்ற எண்ணம் இருந்தது. எனக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் நான் கேஎல்.ராகுல் பாய் இடம் சென்று பேச விரும்புகிறேன். அவரிடம் பேசும்பொழுது நான் நல்ல அதிர்வுகளை ஒரு உணர்கிறேன். அவர் என்ன ஆலோசனை கொடுத்தாலும் அது எனக்கு வேலை செய்யும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் இந்த பிடிவாதம்தான்.. அவுட் ஆகறதுக்கு முக்கிய காரணம் – மஞ்சுரேக்கர் விமர்சனம்

தற்போது இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் நிதீஷ் குமார் ரெட்டி களத்தில் இந்திய அணியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் இந்திய அணியை காப்பாற்றினால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய இன்னிங்ஸ் ஆக அது அமையும்.

- Advertisement -
Published by

Recent Posts