4331 நாட்கள் 12 வருடங்கள்.. பெருமையை இழந்த இந்திய அணி.. நியூசிலாந்து வரலாற்று வெற்றி

0
194
Santner

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

புனே மகாராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 259 ரன்கள் எடுத்தது. தான்வே 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய அணி மீண்டும் செய்த அதே தப்பு

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் செய்த அதே தவறை மீண்டும் செய்தது. நியூசிலாந்தின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் சான்ட்னரிடம் ஏழு விக்கெட்டுகளை கொடுத்து 156 ரன்கள் எடுத்து சுருண்டது. ஜடேஜா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் கைப்பற்றினார். இது தொடர்ந்து இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

மீண்டும் சான்ட்னரிடம் விழுந்த இந்திய அணி

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி மீண்டும் சான்ட்னருக்கு 6 விக்கெட் கொடுத்து விழுந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ரோகித் மேல தப்பில்லை.. சான்ட்னர் கிட்ட இந்த ஸ்பெஷல் இருக்கு.. அதான் பிரச்சனை – அனில் கும்ப்ளே விளக்கம்

இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. மேலும் 4,331 நாட்கள் மற்றும் 12 ஆண்டுகள், 18 டெஸ்ட் தொடர்களுக்கு கழித்து, இந்திய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு இது மிகப்பெரிய தோல்வி என்பதில் சந்தேகம் இல்லை!

- Advertisement -