நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது இங்கிலாந்து அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் பண்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜேமி ஸ்மித் கோல்டன் டக், பென் டக்கெட் 2, ஜோ ரூட் 2, ஜேக்கப் பெத்தேல் 2, ஜோஸ் பட்லர் 4, சாம் கரன் 6 என அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்ற ஹாரி புரூக் சிறப்பாக விளையாடிய சதம் அடித்து 101 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சித்தர்கள் உடன் 135 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜேமி ஓவர்டன் 46 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்க்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்களில் 9 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். இருந்தாலும் ஹாரி புரூக் தனி ஒரு வீரராக நிலைத்து நின்று விளையாடி அதிரடியாக சதம் அடித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து விளையாட வந்த நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்சல் 91 பந்துகளில் 78 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 51 பந்துகளில் 51 ரன் எடுக்க, அந்த அணி 36.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விராட் ரோகித்துக்கு தாங்கள் விழறத பார்க்க காத்திருக்காங்கனு தெரியும்.. 2 பேருமே கம்பீரை கண்டுக்கல – முகமது கைஃப் பேச்சு
நீண்ட நாட்கள் கழித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.