உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து தொடருக்கு நியூசிலாந்து அணி அறிவிப்பு.. கம்பேக் கொடுக்கும் 2 முக்கிய நட்சத்திரங்கள்.!

0
277

13-வது உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வைத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. 10 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடருக்காக அனைத்து அணிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன.

50 ஓவர் உலகக் கோப்பை என்பதால் அனைத்து அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தங்களை உலகக்கோப்பைக்கு தயார் படுத்தி வருகின்றன . இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய தென்னாப்பிரிக்கா சென்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் கலந்து கொள்ள இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட வருகிறது.

- Advertisement -

கடந்த முறை உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. அதன்பிறகு ஓய்வில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக அந்த அணி வருகின்ற 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அங்கு நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது . இந்த போட்டி தொடர்களுக்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், அறிவித்திருக்கிறது.

யுஏஇ அணியுடன் ஆன டி20 போட்டி தொடரில் ஏராளமான புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் அணிக்கு முன்னணி வீரர்கள் பலரும் திரும்பி இருக்கின்றனர். வர இருக்கின்ற உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அந்த அணி தனது முன்னணி வீரர்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்ந்தெடுத்து இருக்கிறது.

- Advertisement -

நீண்ட நாட்களாக நியூசிலாந்து அணிக்கு விளையாடாமல் இருந்த அந்த அணியின் முன்னணி வேக பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். கடந்த வருடம் இவர் நியூஸிலாந்து அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் நடைபெற்ற டி20 லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த ட்ரெண்ட் போல்ட் தற்போது உலகக்கோப்பை நடக்க இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டு விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன் ஆன கேன் வில்லியம்சன் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து பயிற்சியை தொடங்கியிருக்கிறார் .மேலும் முதுகுப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜெமிசன் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணியின் பந்துவீச்சு துறையை பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது . இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு நியூசிலாந்து அணி முழு பலம் கொண்ட வலுவான அணியை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறது. இந்த அணிக்கும் உலக கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கும் நியூசிலாந்து அணி வீரர்கள்:

டாம் லாதம் ( கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, வில் யங்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான நியூசிலாந்து வீரர்கள்:

டிம் சவுத்தி (கேப்டன்), ஃபின் ஆலன் (இங்), ஆதி அசோக் (யுஏஇ), சாட் போவ்ஸ் (யுஏஇ), மார்க் சாப்மேன், டேன் கிளீவர் (யுஏஇ), டெவோன் கான்வே (இங்கிலாந்து), லாக்கி பெர்குசன் (இங்கிலாந்து), டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் (யுஏஇ) , மாட் ஹென்றி (இங்கிலாந்து), பென் லிஸ்டர் (யுஏஇ), கைல் ஜேமிசன், கோல் மெக்கன்சி (யுஏஇ), ஆடம் மில்னே (இங்கிலாந்து), டேரில் மிட்செல் (இங்கிலாந்து), ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ் (இங்கிலாந்து), ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட், இஷ் சோதி (இங்கிலாந்து), பிளேர் டிக்னர் (யுஏஇ), வில் யங் (யுஏஇ)