நாங்க குறி வச்சது ஒரே இந்திய பேட்ஸ்மேனுக்குதான் .. அவரை பார்த்து பயந்தோம் – நியூஸி அஜாஸ் படேல் பேச்சு

0
55
Rishabh

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ஒரு குறிப்பிட்ட இந்திய பேட்ஸ்மேனுக்கு குறி வைத்ததாக நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் கூறியிருக்கிறார்.

கடந்த 12 வருடங்களில் உள்நாட்டில் டெஸ்ட் தொடரை தோற்காமல் இந்திய அணி சாதனை படைப்பு வந்தது. இந்த நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஸ் செய்தது. இந்த அதிர்ச்சிகரமான தோல்வியை இந்திய தரப்பில் யாராலும் ஏற்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

- Advertisement -

ஏமாற்றிய நட்சத்திர வீரர்கள்

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் யூனிட்டில் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சரியாக விளையாடாதது முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் சராசரியாக விளையாடி இருந்தாலே இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருக்க முடியும்.

இதேபோல் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் வழக்கமாக உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும், இந்த முறை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இந்த நான்கு வீரர்களும் போட்டிக்குள் வராதது இந்திய அணி வரலாற்று தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருவரையே நாங்கள் குறி வைத்தோம்

இதுகுறித்து நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் கூறும்பொழுது “நாங்கள் இந்த தொடரில் ரிஷப் பண்ட்டை குறி வைப்போம். ஏனென்றால் அவர் கிரிசில் இருக்கும் பொழுது பயப்பட மாட்டார். எதுவாக இருந்தாலும் அவர் அவருடைய விளையாட்டை விளையாடுவார். அவருடைய தத்துவம் என்னவென்றால் நீங்கள் கிரிசில் இருக்கும் பொழுது நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் ஆட்டம் இழந்தால் பரவாயில்லை என்பதுதான்”

இதையும் படிங்க : சச்சின் கிடையாது.. இந்த இந்திய பவுலருக்கு பந்து வீசவே வெறுப்பா இருந்தது.. திருப்பி தந்தார் – பிரட் லீ பேச்சு

“ஆஸ்திரேலியாவில் நிலைமைகள் வேறு மாதிரியாக இருக்கும். எனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்ல முடியாது; எடுத்துச் செல்லவும் கூடாது. அதனால் உங்களுக்கு எந்த பலனும் கிடையாது. உங்களிடம் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார்கள். அழுத்தம் இருக்கவே செய்யும் முன்னேறி செல்ல வேண்டும். வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -