நியூசிலாந்து அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை நியூசிலாந்து அணி அறிவித்திருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டி நாளை காலே மைதானத்தில் துவங்குகிறது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 26 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு சவால் அளிக்கக்கூடிய இடத்தில் நியூசிலாந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 68%, ஆஸ்திரேலியா 62% உடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து 50% சதவீதத்துடன் இருக்கிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இனி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடாது.
இப்படியான நிலையில் நியூசிலாந்தின் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுதாக வெல்லும் பட்சத்தில், அடுத்து இந்திய அணிக்கு எதிராக நேரடியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதால், அந்தத் தொடங்கும் இந்திய அணிக்கு ஏதாவது அதிர்ச்சி அளிக்க முடிந்தால், அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எழுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். நியூசிலாந்து அணிக்கு சாதகத்தை உண்டாக்கும்.
நால்முனை தாக்குதல் பிளேயிங் லெவன்
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நியூசிலாந்து பிளேயிங் லெவனில் பிரதான சுழல் பந்துவீச்சாளர்களாக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் மிட்சல் சான்ட்னர் இருக்கிறார்கள். ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டராக பிரேஸ்வெல் இருக்கிறார். மேலும் இடதுகை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சச்சின் ரவீந்தராவும் இருக்கிறார். இதில் அஜாஸ் படையல் தவிர மூன்று சுழல் பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்வார்கள்.
இலங்கையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திற்கு பெரிய சுழல் பந்துவீச்சு படையை நியூசிலாந்து இறக்கி இருக்கிறது. மேலும் அதில் மூன்று பேர் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் பேட்டிங் வலிமையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இலங்கை அணியை வென்று இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பில் நெருக்கடியை உண்டாக்க நியூசிலாந்து திட்டமிட்டு இருக்கிறது.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்
வில் யங், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்தரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்சல, டாம் லாதம், மிட்சல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ் வெல், கேப்டன் டிம் சவுதி,மேட் ஹென்றி மற்றும் அஜாஸ் படேல்.