என் குரூப்ப நினைச்சு நான் பெருமைப்படல.. அந்த ஒரு மனிதருக்காக ரொம்ப வருத்தப்படுறேன் – மிட்சல் சான்ட்னர் பேட்டி

0
1964
Santner

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன்னுடைய குழுவை நினைத்து தான் பெருமைப்பட முடியவில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சு யூனிட்டில் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். இதன் காரணமாக அவர்களது அணியில் வீரர்கள் உள்ளே வருவதும் வெளியே போவதுமாகவே இருந்தது.

இதைத் தொடர்ந்து மிகப்பெரிய பின்னடைவாக இந்தத் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றி இருந்த வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி அரை இறுதி போட்டியில் கேட்ச் எடுக்கும் பொழுது தோள்பட்டையில் காயமடைந்தார். இந்த நிலையில் நேற்று போட்டி துவங்குவதற்கு முன்பாக அவருக்கு உடல் தகுதி பரிசோதனை நடைபெற்றது. அவர் பந்து வீசும் அளவுக்கு உடல் தகுதியோடு இல்லை என்பதால் மிகவும் வருத்தத்தோடு வெளியேறினார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைய இது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

என்னால் பெருமைப்பட முடியவில்லை

இது குறித்து மிச்சல் சான்ட்னர் பேசும்பொழுது “மேட் ஹென்றி இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலராக இருந்தார். அவரால் சாதகம் இல்லாத ஆடுகளத்தில் கூட விக்கெட் கைப்பற்ற முடியும். அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். மேலும் அணிக்கான வீரர். நேற்று அவர் விளையாட முடியாததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவர் இந்த போட்டிக்காக எல்லாவற்றையும் கொடுப்பதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவர் விளையாட முடியாதது பெரிய துரதிஷ்டமாக அமைந்தது”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபியை கொடுத்ததே தப்பு.. அதை பார்க்கவே நல்லா இல்ல.. இதான் காரணம் – சோயப் அக்தர் விமர்சனம்

“இது போன்ற தொடர்களில் விரைவான மாற்றங்களால் எதுவும் நடக்காது. இருந்த போதிலும் கிடைத்த வீரர்களை வைத்து நாங்கள் செயல்பட்ட விதத்தில் எனக்கு மகிழ்ச்சிதான். அதே சமயத்தில் அணியில் வீரர்கள் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. இதனால் என்னுடைய குருப் பற்றி நான் பெருமைப்பட முடியாது. அதே சமயத்தில் ரச்சின் திரும்பி வந்து விளையாடிய விதமும் பந்து வீசிய விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -