நேற்று ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என அபாரமாக கைப்பற்றி இருக்கிறது. மேலும் டி20 உலகக் கோப்பைக்கு செல்வதற்கு இந்திய அணிக்கு சிறந்த தயாரிப்பாகவும் நம்பிக்கையாகவும் இந்த தொடர் அமைந்திருக்கிறது.
இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள மிட்சல் சான்ட்னர் கூறும் பொழுது ” இந்த மொத்த தொடரையும் எடுத்துக் கொள்ளும் பொழுது நாம் இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் இந்திய அணி சிறந்த அணி. மேலும் அவர்களுடைய சொந்த மைதானங்களில் அவர்களை தோற்கடிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்”
“பந்து வீச்சாளர்களுக்காக பவுண்டரி எல்லையை கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம். ஆனாலும் இது மொத்தமாக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த தொடராக இருந்தது. ஒரு தொடர் முழுக்க நல்ல சவால் கிடைத்தால் அது நல்லதுதான். பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என எல்லோரையும் அழுத்தத்தில் வைக்க முடிந்தால் அது நல்ல அனுபவமாக இருக்கும். எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது”
“தெளிவாகச் சொன்னால் தொடரின் முடிவு எங்கள் பக்கம் வரவில்லை. ஆனால் நாங்கள் இந்த தொடரில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம். ஒரு தனியாக பெரிய சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து இன்னும் தயாராக வேண்டும்”
இதையும் படிங்க : ரன்கள் அடிக்காதது விஷயம் இல்ல.. ஆனா சாம்சனின் இந்த விஷயம்தான் பெரிய கவலையா இருக்குது – ஆகாஷ் சோப்ரா வருத்தம்
“ஒரு ஓவரில் 20க்கும் மேற்பட்ட ரண்களை விட்டு தருகிறோம் என்றால் அதை எப்படி 15 ரன்கள் ஆக மாற்றுவது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் 230 ஸ்கோர் கூட இங்கு துரத்த முடிவதாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.