இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினால் அவர்களுக்கு நன்மை இருக்கிறது எனவும் ஆனால் அதைத் தாண்டி வேறு ஒரு பிரச்சினை மற்ற அணிகளுக்கு இருக்கிறது எனவும் நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்து அணி துபாய் வந்திருக்கிறது.
இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் சாதகம்
தற்போது துபாய் வந்து சேர்ந்திருக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறும்பொழுது இந்திய அணிக்கு ஒரே இடத்தில் விளையாடுவதால் என்ன மாதிரியான சாதகங்கள் கிடைக்கிறது? தாங்கள் என்ன மாதிரியான அலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இது குறித்து மிட்சல் சான்ட்னர் பேசும்பொழுது “இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடி கண்டிஷனுக்கு பழகிவிட்டது. விக்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்துதான் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எனவே விக்கெட் குறித்து இந்திய அணிக்கு மிகவும் நன்றாக தெரிந்திருக்கும். மேலும் நாங்கள் லாகூரில் விளையாடியதை விட இங்கிருக்கும் விக்கெட் கொஞ்சம் மெதுவாக இருக்கும். நாங்கள் இந்த சவாலுக்கு தயாராக இருக்கிறோம்”
பயண அலைச்சலின் பாதகம்
“எல்லாம் தாண்டி நாங்கள் இறுதியாக ஒரு சிறந்த அணிக்கு எதிராக விளையாடுவதற்காக வந்திருக்கிறோம். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றிகள் மற்றும் ரன்கள் எங்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்கிறது. இது எங்களை கொஞ்சம் முன்னிலையில் வைக்கிறது. நாங்கள் இதைத் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்”
இதையும் படிங்க : தோனி ஆடும் வரை.. ஆர்சிபி ஐபிஎல் கோப்பை ஜெயிக்காது.. கனவு காண வேண்டாம் – ரஷீத் லத்திப் பேட்டி
“இந்தத் தொடரில் தொடர்ந்து பயணம் செய்வது ஒரு பொதுவான விஷயமாக இருந்து வருகிறது. ஏறக்குறைய நாங்கள் தற்போது தொடர் நடக்கும் அனைத்து மைதானங்களிலும் விளையாடிவிட்டோம் என்று நினைக்கிறேன். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக துபாயும் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாம் இந்த சவால்களுக்கு தயாராக இருந்தால் நமக்கு எல்லாமே நல்லதாகவே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






