“நியூசிலாந்து பக்காவா பிளான் போடலாம்.. ஆனா அவங்களுக்கு நாங்க போட்ட பிளான் இதுதான்!” – தென் ஆப்பிரிக்கா கேப்டன் அதிரடி பேச்சு!

0
482
Bavuma

இன்று ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் புனே மைதானத்தில் மோதிய போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் மட்டும் இழந்து 357 ரன்கள் குவித்தது. இந்த அணி கடைசியாக முதலில் பேட்டிங் செய்த எட்டு போட்டிகளில் 350 ரன்களை தாண்டி அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க தரப்பில் குயிண்டன் டி காக் மற்றும் வாண்டர் டேசன் சதங்கள் விளாசினார்கள். மில்லர் 30 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்கா அணி மெதுவாக துவங்கி இறுதியில் அதிரடியாக விளையாடும் இன்னிங்சை முடித்தார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் வந்த தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்களுக்கு நியூசிலாந்து அணியை சுருட்டி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்கள். இந்த உலகக் கோப்பையில் ஐந்து முறை முதலில் பேட்டிங் செய்து ஐந்து முறையும் நூறு ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறும் பொழுது “இன்று எங்களுடைய பேட்டிங் செயல்பாடு மிகச் சிறந்ததாக இருந்தது. அதேபோல எங்களுடைய பந்துவீச்சு செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

குயின்டன் முதலில் மிக மெதுவாக ஆரம்பித்து, இறுதியில் அந்த துவக்கத்தை பெரிய ரன்களாக மாற்றினார். நாங்கள் முதல் முப்பது ஓவர்களில் பொறுமையாக விளையாடி அதற்கடுத்து தாக்குதலில் விளையாட வேண்டும் என்பதுதான் திட்டமாக வைத்திருந்தோம்.

நாங்கள் எப்போதும் பந்துவீச்சில் புதிய பந்து மற்றும் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். அந்த நேரத்தில் அவர்கள் கடுமையாக தாக்க வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். இதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். மீண்டும் நாங்கள் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட்டை வைத்து பார்க்கும் பொழுது, அந்த அணி ஏறக்குறைய அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்று கூறலாம். அதே சமயத்தில் ரன் ரேட்டில் பெரிய அடி வாங்கிய நியூசிலாந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.