உலக கிரிக்கெட்

95 ஓவர்.. வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்த ரச்சின் ரவீந்தரா.. நியூசிலாந்து முதல் டெஸ்டில் அபாரம்

தற்போது நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திரா அதிரடியில் ரன்கள் குவித்து வருகிறது.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று கோட்டைகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சி

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் 52, மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் 52, ஷாய் ஹோப் 56 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் வழக்கம் போல் ஒற்றை இலக்கத்தில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜேக்கப் டஃபி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

மீண்டெழுந்த நியூசிலாந்து அணி

இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வந்த நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் 250 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் உடன் 145 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஒரு பையன் இருக்கார்.. அவர கொண்டு வாங்க சும்மா ஜெயிக்கலாம் – ஹர்பஜன் சிங் பேச்சு

இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் ஒரு நாள் போட்டி போல அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 185 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 176 ரன்கள் குவித்தார். மொத்தம் 95 ஓவர்கள் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து இருக்கிறது. மூன்றாவதும நாள் முடிவில் 481 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: NZ vs WI

Recent Posts