ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யார் என்பது குறித்து புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்திய அணி ஒன்பதாவது ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது.
இந்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் யுஏஇல் எட்டு ஆசிய நாடுகள் பங்குபெற்று விளையாடும் ஆசியக் கோப்பைத்தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் பிரிவில் பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் நாடுகள் இடம் பெற்று இருக்கின்றன.
இந்திய அணியின் ஆதிக்கம்
இந்திய அணி இதுவரையில் ஆசிய கோப்பை தொடரில் எட்டு முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இலங்கை அணி ஆறு முறை கோப்பையை வென்று இருக்கிறது. பாகிஸ்தான் இரண்டு முறையும் பங்களாதேஷ் இதுவரையில் ஆசிய கோப்பையை வெல்லவில்லை.
தற்போது இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியன் ஆக இருந்து வருகிறது. மேலும் இறுதியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை வென்று ஆசிய சாம்பியனாகவும் இருந்து வருகிறது. எனவே இந்த முறை ஆசியக் கோப்பையை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
துவக்க ஜோடி யார்?
இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துணை கேப்டன் பில் மற்றும் அதிரடி இளம் இடது கை ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இருவரும் களம் இறங்குவார்கள் என இந்திய அணி நிர்வாகத்தின் சிந்தனைக்குழு தெரிவித்திருக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த இந்த ஜோடி டி20 கிரிக்கெட்டில் துவக்க இடத்தில் சாதிக்குமா? என்று பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க : மைக்கேல் கிளார்க் அறிவே கிடையாதா.. எங்கள பாத்தா எப்படி தெரியுது?.. ஹர்பஜன் பாவம் – உத்தப்பா விமர்சனம்
இதன் காரணமாக துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என்பது தெளிவாகிவிட்டது. துவக்க வீரராக வந்து அதிரடியாக மூன்று சதங்களை சமீபத்தில் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். கில் வருகையால் தற்போது அவருடைய துவக்க இடத்தை இழந்து விட்டார். கம்பீர் அவருக்கு மூன்றாவது இடத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






