இதுபோன்று ஒரு போட்டியை ஜெயிக்க, 13-14 வருடங்கள் பல தோல்விகளை கடந்து வந்திருக்கிறேன் – ‘சூப்பர் ஓவர் ஹீரோ’ நெதர்லாந்து வீரர் பேட்டி!

0
865

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் போட்டிகளில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிக்கோலஸ் பூரன் சதம் அடித்தார். பிரண்டன் கிங்(76), சார்லஸ்(54) ரன்கள் அடித்தனர். 50 ஓவர்களில் 374/6 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அடுத்ததாக பேட்டிங் செய்த நெதர்லாந்து அணிக்கு தேஜா 111 ரன்கள், கேப்டன் எட்வார்ட்ஸ் 67 ரன்கள் அடித்துக் கொடுக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. பின்னர் சூப்பர் ஓவர் நடைபெற்றது.

- Advertisement -

லோகன் வான் பீக் நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஓவரில் 4, 6, 4, 6, 6, 4 என 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் அடித்தார். அதன்பின் அவரே நெதர்லாந்து அணி சார்பில் சூப்பர் ஓவர் பவுலிங்கும் செய்தார். 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து நெதர்லாந்து அணியை ஜெயிக்க வைத்தார்.

லோகன் வான் பீக் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். விருது பெற்றபின் பேசிய அவர் கூறுகையில், “வெற்றி பெற்ற இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த போட்டியில் வெற்றிபெற எதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். பேட்டிங்கில் ஸ்காட் எட்வார்ட்ஸ் மற்றும் தேஜா இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி நம்பிக்கையை கொடுத்தார்கள்.

13-14 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எண்ணற்ற பல போட்டிகளில் இதுபோன்ற சூழல்களை சந்தித்து தோல்விகளையும் எதிர்கொண்டு இருக்கிறேன். இம்முறை வெற்றியை கண்டது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் இது போன்ற ஒரு வெற்றிக்கு இன்னும் 13-14 வருடங்கள் கூட காத்திருக்க தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

சூப்பர் ஓவரை எதிர்கொள்ளும்போது பந்துகளை சரியாக கவனித்து கடைசி வரை நிதானமாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கேற்றார் போல பலன் கிடைத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. உண்மையில் இது நமக்கான போட்டியாக இருந்தால் நமக்கு கண்டிப்பாக நன்றாக அமையும் என்றும் தோன்றியது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் 49ஆவது ஓவர் வீசுவதற்கு வரும்பொழுது, கண்டிப்பாக இந்த இடத்தில் இருந்து நாம் வெற்றியை பெறுவோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூப்பர் ஓவர் வரும் என்று நினைக்கவில்லை. கடைசியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது, உண்மையில் இது எங்களுக்கான போட்டி என்று உணர வைத்தது.

இங்கு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக்கோப்பை செல்வதற்கு ஒரு வாய்ப்பை பெறுவது என்பது மிகப்பெரியது. கண்டிப்பாக இந்த வெற்றியை என்ஜாய் செய்வோம். அதேநேரம் அடுத்த போட்டிகளிலும் கவனம் செலுத்துவோம். உலகக்கோப்பையில் விளையாடுவது என்பது பெருமிதமானது. அங்கு சென்று நன்றாக செயல்படுவதற்கும் காத்திருக்கிறோம்.” என்றார்.