“பாபர் உலக கோப்பையில் நெதர்லாந்தையே ஜெயிக்க மாட்டிங்க.. ஸ்கூல் பசங்க நீங்க!” – கம்ரான் அக்மல் கடுமையான விமர்சனம்!

0
6345
Kamran

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த படுதோல்வி, அந்த அணி நிர்வாகத்தை மிகக் கடுமையாக பாதிப்படைய செய்திருக்கிறது.

இந்தத் தோல்விக்கு வெளியில் இருந்து வரும் எதிர் வினைகளை விட, பாகிஸ்தானுக்குள் இருந்து குறிப்பாக முன்னாள் வீரர்களிடம் இருந்து வரக்கூடிய எதிர் வினைகள் கடுமையாக இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான அணி கடந்த மாத இறுதியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டில் அதிக போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி நிறைய வெற்றிகளை பெற்று வந்திருக்கிறது. மேலும் நல்ல வேகப்பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது. பேட்டிங்கில் பாபர் அசாம் இருக்கிறார்.

இப்படியான காரணங்களால் பாகிஸ்தான் அணியின் மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் இந்திய அணி அவற்றை எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த காரணத்தால் அவர்கள் தரப்பிலிருந்து பாகிஸ்தான் அணிக்கு கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும்பொழுது ” உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால், இந்த அணுகுமுறை இருந்தால் நீங்கள் நெதர்லாந்தை வீழ்த்த கூட போராடுவீர்கள்.

அணி நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்தியாவுக்கு எதிராக உங்களை முதலில் யார் பந்து வீச சொன்னது? குறைந்தபட்சம் உங்கள் பேட்ஸ்மேன்களை கிரீசில் நிற்க சொல்லுங்கள். நீங்கள் வங்கதேசத்திற்கு எதிராக 190 ரன்களை 40 ஓவர்களில்தான் சேஸ் செய்தீர்கள். இதனால் உங்கள் ரன்ரேட் அடி வாங்கி இருக்கிறது.

சதாப், இப்திகார், சல்மான் இவர்களிடம் சொல்லுங்கள், இவர்களை முழுஓவர்களையும் விளையாட சொல்லுங்கள். குறைந்தபட்சம் 260 ரன்கள் செல்லுங்கள். இவர்களைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான கேள்விகளை கேட்காது என்று இவர்களுக்கு தெரியும். இவர்களது அணுகுமுறை, திட்டம் எதுவுமே சரி இல்லை. ஏதோ விடுமுறைக்கு போனது போல் இருக்கிறார்கள். பள்ளி சிறுவர்கள் போல் விளையாடுகிறார்கள்!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!