2022 டி20 உலகக் கோப்பைக்கு இந்த ஐந்து பந்து வீச்சாளர்களுடன் செல்லுங்கள் – ஆஷிஸ் நெஹ்ரா அறிவுரை

0
1325
Ashish Nehra

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது. தற்போது நடந்து வரும் டி20 தொடரையும் முதல் போட்டியை வென்று இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் கோலி கடந்த டி20 உலகக் கோப்பை தொடர் உடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார்.

ரோகித் தலைமையில் அடுத்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சந்திக்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலியாவின் மைதானங்களுக்கு ஏற்ப வேகப்பந்து வீச்சாளர்களை கட்டமைப்பது மிகவும் முக்கியம். ஆக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் படை ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஆசிஷ் நெஹ்ரா தற்போது பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஸ் நெஹ்ரா இது குறித்து பேசும்போது, ஒருவேளை நாளை உலக கோப்பை தொடர் தொடங்கினால் நான் இந்த ஐந்து பேர் வேகப்பந்து வீச்சாளர்களுடன் சொல்வேன் என்று ஐந்து பேரை நெஹ்ரா பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலில் சீனியர் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஆகியோரை நெஹ்ரா சேர்க்கவில்லை.

சிராஜ், பும்ரா, ஷமி, ப்ரஷித் மற்றும் தீபக் சஹார் ஆகியோர்தான் தான் பரிந்துரைக்கும் வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியல் என்று நெஹ்ரா கூறியுள்ளார். புவனேஸ்வர் மற்றும் சஹார் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் என்றும் அதனால் ஒருவரை மட்டுமே எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கம் கூறியுள்ளார். மேலும் அவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் வரும் ஐபிஎல் தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும் நெஹ்ரா கூறியுள்ளார்.

விரைவில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளதால் இந்திய அணி நெக்ரா சொன்ன ஐந்து பந்து வீச்சாளர்களை டி20 உலகக்கோப்பைக்கு கொண்டு போகும் அல்லது வேறு பந்துவீச்சாளர்களை முயற்சி செய்யுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -