இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரை விமர்சிக்க தயாராக இருக்கும் கூட்டம் இந்திய அணி சிறப்பாக விளையாடும் பொழுது அவரை பாராட்ட செய்வதில்லை என நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி கம்பீர் பயிற்சியின் கீழ் மிக சுமாரான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இங்கிலாந்தில் இளம் இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக செயல்பட்ட போதும் கம்பீருக்கு வெளியில் இருந்து பெரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை.
ஹீரோக்களை வணங்குகிறோம்
இதுகுறித்து நவஜோத் சிங் சித்து பேசும்பொழுது ” நாம் எப்பொழுதும் ஹீரோக்களையே வணங்குகிறோம். இந்தியா கொஞ்சம் சுமாராக செயல்படும் போதெல்லாம் கம்பீரை விமர்சிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறேன். ஆனால் இன்று இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது நீங்கள் எழுந்து கம்பீரை வாழ்த்துவீர்களா?”
” மேலும் இங்கிலாந்தில் குல்தீப் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்றாலும் கூட அவர் மாற்று வீரர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கையுடன் வாய்ப்புகளை வழங்கினார். இதை கொண்டு வந்ததே அவர்தான். அப்பொழுதெல்லாம் அவரை நோக்கி பல கேள்விகள் கேட்டவர்கள், இப்பொழுது அந்த திட்டம் சரியாக செயல்பட்ட பொழுது ஏன் பாராட்டவில்லை?”
அவர் சொன்னது நடந்தது
“இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது அதில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றார்கள். சில புதிய வீரர்களும் இடம் பெற்றார்கள். மேலும் அணியில் முக்கியமான நான்கு வீரர்கள் இல்லை என கம்பீர் கூறியிருந்தார்”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் அதை செய்யலைன்னா நான் ஆச்சரியப்படுவேன்.. அது நடக்கத்தான் போகுது – கிரேக் சேப்பல் கருத்து
“மேலும் முன்னணி வீரர்கள் இல்லாத இந்த நிலையில் இளம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதற்கு இதை வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இறுதியில் அவர் கூறியபடியே இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார்கள். அவர் சொன்னதுதான் இறுதியில் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.






