இது அராஜகத்தின் உச்சம்.. ஆர்சிபி தோல்வியை கிண்டல் செய்த நவீன் உல் ஹக்.. திருப்பி அடிக்கும் ரசிகர்கள்

0
4812

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி குஜராத்திடம் தோல்வியை தழுவி ப்ளே ஆஃப் வாய்ப்பை பறி கொடுத்தது. இதில் ஆர்சிபி அணியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 61 பந்துகளில் 101 விளாசினார். இதன் மூலம் ஆர்சிபி 20 ஓவரில் 197 ரன்கள் விளாசியது.

இதனை அடுத்து குஜராத் அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடு 52 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார்.  இதில் 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்த அபார ஆட்டத்தின் மூலம் குஜராத் அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

- Advertisement -

இதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த rcb தொடரை விட்டு வெளியேறியது. கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஆர் சி பி அணி இம்முறை உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் கோலியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் நவீன் உல் ஹக்  அராஜகத்தின் உச்சம் என்று அழைக்கக்கூடிய ஒரு செயலை செய்துள்ளார். லக்னோ ஆர் சி பி அணிகள் மோதிய ஆட்டத்தில் நவீன், விராட் கோலி இடையே மோதும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருவரும் சமூகவலைத்தளத்தில் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் விராட் கோலி எனக்கு நான்தான் போட்டி என்று கூறிவிட்டு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் விராட் கோலி ரசிகர்கள் நவீன் செல்லும் இடமெல்லாம் அவரை கிண்டல் செய்து வந்தார்கள்.

- Advertisement -

கொஞ்ச நாள் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கூட விராட் கோலி ரசிகர்களை வாயை மூட சொல்லி நவீன் செய்கை காட்டினார். இந்த நிலையில் ஆர்.சி.பி அணி தோற்ற உடன் நவீன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர் விழுந்து விழுந்து சிரிப்பது போல் போஸ்டை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் கடுப்பின் உச்சத்துக்கு சென்று விட்டனர். இது மிகவும் அநாகரிகமான செயல் என்றும் தேவை இல்லாமல் கவனத்தை ஈர்ப்பதற்காக நவீன் உல் ஹக் இப்படி செய்கிறார் என்றும் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
பலரும் நவீன் உன் ஹக்கை கடுமையாக சாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நவீன் உல் ஹக்கை சேர்க்க கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.