கோலியை பழிக்கு பழிவாங்கும் ஆப்கான் வீரர் நவீன்.. இப்படி வச்சு செஞ்சிட்டாரே.. கடுப்பான கோலி ரசிகர்கள்

0
3779

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு காலத்தில் வீரர்களுக்கிடையே நட்பு ஏற்படும். சர்வதேச கிரிக்கெட்டில் எதிரிகளாக இருந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது கால்பந்து தொடருக்கு செம டப் கொடுக்கும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் மோதிக் கொள்கிறார்கள்.

கடந்த வாரம் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தில் நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் மோதிக்கொண்டது தான் அனைத்துக்கும் ஆரம்ப புள்ளி. இதில் விராட் கோலி ஷூ கால் எடுத்து காட்டியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் கடுப்பான நவீன் உல் ஹக், விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டார்.

- Advertisement -

இதற்கு ஆதரவாக கம்பீர் களமிறங்கினார். இதனால் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் நூறு சதவீதம் ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு இருவரும் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் instagramல் ஸ்டோரீஸ் போட்டு இருந்தார்கள். இந்த பிரச்சனை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர்.

இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் இந்த பிரச்சனையை கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கி வைத்தார். லக்னோ, குஜராத் அணியும் அகமதாபாத்தில் விளையாடிய போது விராட் கோலி தேவையில்லாமல் இன்ஸ்டாகிராமில் லக்னோ அணி வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் குஜராத் அணி வீரர்களுக்கு ஆதரவாக ஸ்டோரிஸ் போட்டு சேட்டை செய்து கொண்டிருந்தார்.

இது தேவையில்லாத வேலை என பலரும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பையும் ஆர் சி பி அணியும் மோதிய ஆட்டத்தில் ஆர் சி பி ஐ கலாய்க்கும் விதமாக தற்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் போட்டு வெறுப்பேத்திருக்கிறார்.நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் நவீன் உல் ஹக், அதனை கொண்டாடும் விதமாக மாம்பழம் ருசியாக இருக்கிறது என பின்னணியில் மும்பை மேட்ச் ஓடுவதை போட்டோ எடுத்து போட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 200 ரன்கள் என்ற இலக்கை சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 16.3 ஓவர்லே மும்பை அணி அதனை எட்டியது.இதனை கலாய்க்கும் விதமாக மீண்டும் நவீன் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் மும்பை அணி வெற்றி பெரும் தருவாயில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து போட்டு ரவுண்டு 2 இது.

நான் சாப்பிட்டதில் சிறந்த மாம்பழம் இதுதான்  என்று அவருடைய நண்பரை டேக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
இது விராட் கோலி ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. எனினும் விராட் கோலி செய்ததற்கு தான் நவீ. தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.