ஐபில் கிரிக்கெட் தொடரில் நேற்று கால்பந்து போட்டிகளையே மிஞ்சும் அளவுக்கு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. லக்னோ அணிகு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி விக்கெட்டுகளை வீழ்த்தும்போது எல்லாம் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
இது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் போட்டியின் போது பிட்ச் நடுவே விராட் கோலி நடந்ததாக நவின் உல் ஹக் குற்றம் சாட்டியதே இந்த மோதலுக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
அப்போது விராட் கோலி ஷூ காலை தூக்கி ஏதோ கூறினார். இது அவமரியாதை செயலாக கருதப்படுகிறது. இதுதான் போட்டி முடிந்ததும் மெயர்ஸ், விராட் கோலியுடன் கோபமாக பேசிக் கொண்டு வந்தார். இதனை பார்த்த கம்பீர், மெயர்சை அழைத்துச் சென்றார். அப்போது விராட் கோலிக்கும் கம்பிருக்கும் வாக்குவாதம் ஏற்பட இரு அணி வீரர்களும் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்கு முன்பு இரு அணி வீரர்களும் பரஸ்பரமாக கை கொடுக்கும் போது கம்பீர் கோலியிடம் வேகமாக கையை கொடுத்து விட்டு கோபமாக சென்றார். அப்போது நவீன் உல் ஹக், விராட் கோலி கையை பிடித்து ஏதோ கூற விராட் கோலி அதற்கு பதிலடி கொடுத்தார். அப்போது நவீன் உல் ஹக் மீண்டும் கோலியை சண்டைக்கு அழைக்க, அங்கு நின்ற மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை தடுத்தார்.
இதனை அடுத்து தான் கம்பீர் ,கோலி மோதல் நடந்தது. இதன் பிறகு விராட் கோலியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கே எல் ராகுல் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக லக்னோ வீரர் நவீன் உல் ஹக் சென்றார். அப்போது கே எல் ராகுல் நவீன் உல் ஹக்கை அழைத்து மன்னிப்பு கேட்குமாறு கூறினார். பிரச்சனையை பேசி தீர்க்குமாறு அழைத்தார்.
ஆனால் இதனை ஏற்காத நவீன் உல் ஹக், இவன் கிட்ட எல்லாம் பேச முடியாது என்பதுபோல் கையை காட்டிவிட்டு கே என் ராகுலை உதாசனை படித்து சென்றார். இதை பார்த்து கோலியும் கேல் ராகுலும் அதிர்ச்சி அடைந்தனர். ஆடுகளத்தில் விராட் கோலி நடந்ததாக நவீன் உல் ஹக் குற்றச்சாட்டியதில் எந்த தவறும் இல்லை.
Naveen😭😭😭
— Masum💛 (@chicken_heartz) May 1, 2023
king ko apne ling pe rakh raha pic.twitter.com/O4Qf0tVZyz
அதற்கு விராட் கோலி செய்த செய்கை நவீன் உல் ஹக்கை மேலும் கோபப்படுத்தியது. நவீன் உல் ஹக் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கூட அப்ரீடியிடம் மோதலில் ஈடுபட்டார். இந்த நிலையில் கம்பீர் , விராட் கோலி ஆகியோருக்கு 100% அபராதமும் நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவீதம் ஊதியத்திலிருந்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.