டிராவிட் மட்டுமே செய்ய முடிந்த அதை.. மெக்கலம் செய்ய முடியாது.. கொஞ்சம் அவமானமானது – நாசர் ஹுசைன் கருத்து

0
443
Dravid

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த மேத்யூ மோட் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மீது தனக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நம்பிக்கை இல்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியிருக்கிறார்.

கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் கூட்டணியில் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இயான் மோர்கன் மற்றும் டிரவியர் பெலிஸ் கூட்டணி கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்த ஜோஸ் பட்லர் மற்றும் மேத்யூ மோட் கூட்டணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் காரணமாக ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று பேச்சு
வந்து கொண்டிருந்த பொழுது, தற்பொழுது பயிற்சியாளர் மோட் ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் இவரது இடத்திற்கு டெஸ்ட் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலமைக் கொண்டு வரலாம் என பேச்சுகள் செல்கிறது.

இதுகுறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது “மெக்கலமைக் கொண்டு வருவது எனக்கு சரியான செயல் என தோன்றவில்லை. இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதை மிகச் சிறப்பாக செய்திருந்தார். ஆனால் மெக்கலம் மற்றும் மற்றவர்கள் இதை விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

ஏனென்றால் பயிற்சியாளர்கள் தங்களுக்கு நேரம் இருப்பதை விரும்பக் கூடியவர்கள். மேலும் சிலர் ஐபிஎல் தொடரில் கூடுதல் வேலைகளை செய்து வரலாம். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட்டில் பயிற்சியாளர் பொறுப்பில் ஒருவர் இப்படியான கூடுதல் வேலைகளை விரும்பக் கூடியவராக இருக்கவே மாட்டார்.

இதையும் படிங்க : எங்க இலங்கை அணி செய்றது ரொம்ப அவமானமா இருக்கு.. என்னால அதை மட்டும் ஏத்துக்கவே முடியல – பர்வேஸ் மஹரூப் வேதனை

ஜோஸ் பட்லர் மற்றும் மேத்யூ மோட் கூட்டணி பற்றி என்னுடைய முதல் எதிர்வினை இது. இது கொஞ்சம் அவமானகரமானதாகவும் இருக்கலாம். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் அந்த பாரம்பரியத்தை தொடர்வதில் மிகச் சிறப்பாக ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு சரியான முறையில் எதுவும் செல்லவில்லை. மோசமான செயல் திறன் நிறைய இருந்தது. முடிவுகள் எடுப்பதில் நிறைய தவறுகள் நடந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -