இந்திய ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்; இவர்தான் சிறந்தவர்- நாசர் ஹூசைன் வீடியோ லிங்க் உள்ளே!

0
916
Nasser hussain

மாடர்ன் கிரிக்கெட் உலகில் சச்சின், பிரையன் லாரா ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோர் காலங்கள் முடிந்து, ஏ.பி.டிவிலியர்ஸ் 360 டிகிரி பேட்டிங் என வந்து அவரும் ஓய்வு பெற்று, தற்போது விராட்கோலியா? பாபர் ஆசமா? என்று போய்க்கொண்டிருக்கிறது!

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அடுத்த விராட்கோலியாய் வருவாரென்று சிலபலர் பேசி வந்த நிலையில், பாபர் ஆசம் அதற்காக இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் என்ற கருத்து நிலவி வந்தது.

- Advertisement -

இதற்கேற்றார்போல பாபர் ஆசம் மிகச்சிறப்பாகத் தொடர்ந்து விளையாடி வர, அதேவேளையில் விராட்கோலியின் பேட்டிங் பார்ம் சரிய, பாபர் ஆசமின் கொடி உயர பறக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த டி20 உலகக்கோப்பையில் விராட்கோலியின் இந்திய அணி பாபர் ஆசமின் பாகிஸ்தான் அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த, பாபரின் புகழ் இன்னும் பரவ ஆரம்பித்துவிட்டது. இருவரின் இரசிகர்களும் இணையதளங்களில் கோலியா? பாபரா? என்று கடுமையாக மோதி வருகிறார்கள்!

இரசிகர்களிடையே சூழல் இப்படி இருந்தாலும் கோலி-பாபர் நட்பு நல்ல முறையிலேயே தொடர்கிறது. விராட்கோலியின் பேட்டிங் பார்ம் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுவும் கடந்து போகும் வலிமையா இருங்கள் கோலி என்று பாபர் ட்வீட் செய்ய, விராட்கோலியும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என்று மறுசெய்தி அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் ஆட கடினமான ஆனால் பார்ப்பதற்கு அழகான கிரிக்கெட் ஷாட்டான கவர் டிரைல் ஷாட் அடிப்பதில் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று பேசுகையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் பாபர் ஆசமை தேர்ந்தெடுந்து வெகுவாகப் புகழ்ந்து இருக்கிறார்!

- Advertisement -

அதில் அவர் கூறும் பொழுது “நான் முதலில் இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் பாபர் ஆசமிடம் அற்புதமான கவர் டிரைவ் உள்ளது. வளரும் கிரிக்கெட் வீரர்களை, நான் பாபர் ஆசமின் கவர் டிரைவ்களை பார்க்க பரித்துரை செய்கிறேன். நான் எந்த இளம் வீரருக்கு கவர் டிரைவ் பற்றி பாடம் எடுக்கிறேன் என்றாலும், பாபர் ஆசமின் கவர் டிரைவை பார்க்கத்தான் சொல்லுவேன்” என்று கூறியிருக்கிறார்!

நாசர் ஹூசைனின் இந்தக் கருத்து எப்படியும் இணையத்தில் இருதரப்பு இரசிகர்களிடமும் சூடான விவாதங்களைக் கிளப்புவது உறுதி. தான் இப்படிக் கூறினால் எங்கிருந்து விமர்சனங்கள் வரும் என்று புரிந்துதான், இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நாசர் ஹூசைன் பேசி இருக்கிறார்!

- Advertisement -