மான்கன்ட் செய்ததால் பாபா அப்பராஜித்திடம் மோசமாக நடந்து கொண்ட சென்னை வீரர் ஜெகதீசன் – டிவிட்டரில் மன்னிப்பு கடிதம்

0
145
Narayan Jagadeeshan mankand dismissal in TNPL

நேற்று தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பித்தது. இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எல் தொடரின் முதல் போட்டியே சூப்பர் ஓவர் வரை சென்று இரசிகர்களுக்குப் பெரிய விருந்தாய் அமைந்திருக்கிறது.

நேற்று நடந்த முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதினது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லில் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூர்யபிரகாஷின் 62 ரன் அரைசதம், மும்பை அணிக்கு வாங்கப்பட்ட சஞ்சய் யாதவின் 47 பந்திற்கு 87 ரன் என்ற பெரிய அரைசதத்தின் மூலம் 184 ரன்களை நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு குவித்தது.

அடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கேப்டன் ஹவுசிக் காந்தியின் 64 ரன் அரைசதம் மற்றும் கடைசி நேரத்தில் 12 பந்தில் 26 ரன்கள் அடித்த ஹரிஸ்குமாரால் 184 ரன்கள் எடுத்து போட்டியை டிரா ஆக்கியது. அடுத்த நடந்த சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்யும் போது, ஆட்டத்தின் 3.4வது ஓவரில், அந்த ஓவரை வீசிய பாபா அபராஜித் நாராயணன் ஜெகதீசனை கிரிஸை தாண்டி போக, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இதனால் கடுப்பான ஜெகதீசன், சீனியர் வீரர் என்றும் பார்க்காமல் பாபா அபராஜித்திற்கு நடுவிரலை காண்பித்து களத்திலிருந்து வெளியேறினார். இது பலரையும் முகம் சுளிக்கவே வைத்தது.

- Advertisement -

பந்துவீச்சாளர் பந்துவீசும் முன், பவுலிங் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் வெளியே போனால் அவுட் செய்யலாம் அது தவறில்லை, அதை இனி மன்கட் அவுட் என்று அழைக்கக்கூடாது, ரன் அவுட் என்றே அழைக்க வேண்டுமென்று ஐசிசி சட்டத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த இந்த மோசமான செய்கைக்காக நாராயணன் ஜெகதீசன் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் உருக்கமான மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.

“நேற்றைய போட்டியில் நான் மோசமாக நடந்து கொண்டதிற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடுவதற்காகவே வாழ்கிறேன். விளையாட்டோடு சேர்ந்து வரும் விளையாட்டுத் திறன்களை நான் எப்போதும் மதிக்கிறேன். இதனால்தான் நான் செய்தனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. எந்த விளையாட்டிலும் ஆர்வம் ஆக்ரோசம் முக்கியமானது. ஆனால் அதை சரியான வழியில் செலுத்துவதும், கட்டுப்படுத்துவதும் மிக முக்கியமானது. என் கோபத்தை நான் கட்டுப்படுத்த தவறிவிட்டேன். இந்தத் தவறை எந்த சாக்குபோக்கு கூறியும் சரியாக்க நினைக்கவில்லை. வருங்காலங்களில் சிறப்பாக மாறி வருவேன். வருத்தங்களுடன் ஜெகதீசன்” என்று கூறியிருக்கிறார்!