கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

மகளிர் கிரிக்கெட் தேவையில்லாதது.. ஸ்ரீனிவாசனின் 14 ஆண்டுக்கால கருத்தால் மீண்டும் சர்ச்சை.. பதிலடி தந்த இந்திய மகளிர் அணி

முன்னாள் இந்திய கேப்டன் டயானா எடுல்ஜி 2017-ல் என். ஸ்ரீனிவாசன் ஒருமுறை பெண்கள் கிரிக்கெட் பற்றி தனக்கு அக்கறை இல்லை என்று கூறியதாக குற்றம் சாட்டினார். இந்திய அணி ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025-ஐ வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தந்த நிலையில், அந்தக் கருத்துகள் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளன.

- Advertisement -

குறிப்பாக, முதல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்றபோது இந்தியாவுக்கு பெண்கள் அணியே இல்லாததால் தகுதி பெறவில்லை. அதன் பிறகு 52 ஆண்டுகளாக இந்தியாவுக்கு இந்தக் கோப்பை கிடைக்காமல் இருந்தது. ஆனால் இப்போது இந்திய அணி அதை நிறைவேற்றியுள்ளது.

ஆணாதிக்க அமைப்பு:

தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நீண்ட காத்திருப்பை முடித்துக்கொண்டது. 21-ஆம் நூற்றாண்டின் இரு ஐக்கான்களான மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோரது ஓய்வுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் வீராங்கனைகள் கோப்பையை உயர்த்தியபோது, அந்த இரு ஜாம்பவான்களுடன் தங்கள் வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

1978 முதல் 1993 வரை இந்தியாவை வழிநடத்திய எடுல்ஜி, மகளிர் கிரிக்கெட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். “பெண்கள் கிரிக்கெட் 2006-ல் பிசிசிஐயுடன் இணைந்த நாளிலிருந்தே நான் பிசிசிஐயை விமர்சிப்பவர்” என்று 2017-ல் நிகழ்ச்சியொன்றில், எடுல்ஜி கூறினார். “பிசிசிஐ மிகவும் ஆணாதிக்க அமைப்பு. பெண்கள் விதிகளை நிர்ணயிப்பது அல்லது இதில் நுழைவதை அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை.

- Advertisement -

ஸ்ரீனிவாசன் சர்ச்சை கருத்து:

என் விளையாட்டு நாட்களிலிருந்தே நான் உரக்கப் பேசினேன். இப்போதும் கூட, பிசிசிஐயில் மகளிர் கிரிக்கெட் நன்றாகச் செயல்படுவது இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறுவேன்” என்று அவர்  தெரிவித்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐயின் நிர்வாகக் குழுவுக்கு நியமிக்கப்பட்ட அவர், முன்னாள் பிசிசிஐ தலைவரான ஸ்ரீனிவாசனுடன் அடிக்கடி மோதினார். பெண்கள் கிரிக்கெட் தனது அஜெண்டாவில் ஒருபோதும் முன்னுரிமை இல்லை என்று அவர் தன்னிடம் வெளிப்படையாகக் கூறியதாக எடுல்ஜி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: கம்பீர் செய்வது என்ன அர்த்தம்.. ஒன்னுமே புரியல.. கில்லுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கு.. ஆகாஷ் சோப்ரா கருத்து

“இந்த அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். திரு. ஸ்ரீனிவாசன் தலைவரானபோது, ஆண்கள் அணி 2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு வாங்கடே ஸ்டேடியத்தில் அவரை வாழ்த்தச் சென்றேன். ‘எனக்கு விருப்பமிருந்தால் பெண்கள் கிரிக்கெட் நடக்கவே விடமாட்டேன்’ என்று அவர் கூறினார். அவர் பெண்கள் கிரிக்கெட்டை வெறுக்கிறார்,” என்று எடுல்ஜி தெரிவித்தார். தற்போது இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வென்ற நிலையில் சீனிவாசனின் இந்த கருத்து தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனரான என் சீனிவாசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் எந்த ஒரு அணியையும் வாங்க முன்வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts