“எனக்கு இப்ப பிரச்சனை ஷமி சிராஜ்தான் ஸ்டூவர்ட் பிராட் கிடையாது” – டேவிட் வார்னர் கவலை!

0
370
Warner

கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்த சில நாட்களில் மிகவும் முக்கியமான போட்டிகள் நடக்க இருக்கின்றன. ஐபிஎல் முடிந்துள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களை நடக்க இருக்கும் தொடர்கள் கவனம் ஈர்ப்பதாக இருக்கின்றன!

முதலில் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வருகின்ற ஏழாம் தேதி துவங்குகிறது!

- Advertisement -

இதற்கு அடுத்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் உலகப் புகழ் பெற்ற டெஸ்ட் தொடரான ஆசஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடக்க இருக்கிறது.

இதற்காக ஆஸ்திரேலிய அணி முன்கூட்டியே இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆசஸ் தொடருடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டேவிட் வார்னர் அதைத் தாண்டி இறுதியாக பாகிஸ்தான் அணி உடனான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லாத அவர் ஆசஸ் தொடருக்கான வெள்ளோட்டமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு தொடர்களிலும் பந்துவீச்சாளர்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ள டேவிட் வார்னர்
“நான் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கவனம் செலுத்துகிறேன். முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரே என் மனதில் இருக்கிறார்கள்.

இதுதான் எங்களுக்கு இப்போதைய முக்கியம். பின்னர்தான் நான் ஸ்டூவர்ட் பிராட் பற்றி கவலைப்படுவேன். அதுவும் அவரை ஆசஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் எடுப்பதாக இருந்தால்!” என்று கூறியிருக்கிறார்!

டேவிட் வார்னருக்கு ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் மிகப்பெரிய தடுமாற்றம் கடந்த காலங்களில் இருக்கிறது. இதுவரை அவரிடம் 9 முறை அவர் வீழ்ந்திருக்கிறார். 2019 இங்கிலாந்தில் வைத்து நடந்த ஆசஸ் தொடரில் மட்டும் ஐந்து முறை ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!