சர்பராஸ் கான் இடத்தில்.. மும்பைக்கு தம்பி முசிர் கான் சதம்.. ரகானே சொதப்பல்.. ரஞ்சி காலிறுதி

0
399
Musheer

தற்பொழுது ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் காலிறுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு போட்டியில் மும்பை அணியும் பரோடா அணியும் மும்பையில் மோதிக்கொண்ட போட்டி இன்று துவங்கியது.

இந்த போட்டிக்கு முன்பு லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் மும்பை அணியின் முக்கிய வீரரான சிவம் துபே காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சி இருக்கும் ரஞ்சி தொடரில் இருந்துவிலகினார்.

- Advertisement -

இதனால் அவருடைய இடத்திற்கு சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் தேர்வு செய்யப்பட்டார். அண்ணன் இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்க, தம்பி பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கால் இறுதிப் போட்டியில் கலக்கி இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது. மும்பை அணியின் பிரபல துவக்க ஆட்டக்காரர் ப்ரீத்திவி ஷா 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து மேல் வரிசையில் இருந்து மும்பை அணிக்கு எந்த பெரிய ரன்களும் வரவில்லை. மும்பை அணியின் கேப்டன் ரகானே 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் தந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென மும்பை அணியில் வாய்ப்பு பெற்ற முசிர் கான் பொறுமையாகவும் அதே நேரத்தில் பொறுப்பாகவும் விளையாடி மும்பை அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க ஆரம்பித்தார்.

சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் தாண்டி, அதற்கு மேலும் தொடர்ந்து சதம் அடித்து அசத்தினார். மேலும் முதல் நாள் முடிவில் தனது விக்கெட்டை இழக்காமல் 216 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். மும்பை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்திருக்கிறது

சர்பராஸ் கான் அதிரடியாக பேட்டிங் மட்டுமே செய்வார், ஆனால் அவர் தம்பி பேட்டிங் செய்ததோடு கூடுதலாக இடது கையில் சுழற் பந்து வீச்சும் வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட்டில் இந்த நேரத்தில் அண்ணன் தம்பி இவர்கள் பெரிய அளவில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்கள்.