இந்திய கிரிக்கெட்

சூர்யா வேண்டாம் கில்லை கேப்டன் ஆக்குங்க.. ரிங்கு சிங் வேற வேலை செய்ற டைம் வந்துடுச்சு – முரளி கார்த்திக் பேச்சு

இன்று இந்தியா அணி ஆசியக் கோப்பை தொடரில் ஒமான் அணிக்கு எதிராக மோதுகிறது. இந்த போட்டியில் கம்பீர் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஏற்கனவே இரண்டாவது சுற்று தகுதி பெற்று விட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா அணி விளையாடும் போட்டியின் வெற்றி தோல்வி இரண்டாவது சுற்று வாய்ப்பில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாடாத வீரர்கள்

ஆசிய கோப்பை தொடர்பு அதிகபட்சமாக 17 வீரர்களை கூட்டி செல்லலாம் என்ற நிலையில் இந்தியாவின் நிர்வாகம் 15 வீரர்களை மட்டுமே அழைத்துச் சென்று இருக்கிறது. இதில் தற்போது அர்ஸ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா நான்கு பேருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து பேசி உள்ள முரளி கார்த்திக் கூறும் பொழுது “வெளியே அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு யார் தேவை என்று நிச்சயம் தெரியாது. அர்ஸ்தீப் இந்த சூழ்நிலையில் ஒரு போட்டியாவது விளையாட வேண்டும். ஜிதேஷ் முக்கிய விக்கெட் கீப்பராக இருக்க வேண்டியவர். தற்போது சஞ்சு சாம்சனை மேலே விளையாட வைத்து, இவருக்கு கீழ் வரிசையில் வாய்ப்பு கொடுங்கள்”

- Advertisement -

ரிங்கு சிங் இதை செய்ய வேண்டும்

“இதற்கு அடுத்து சிவம் துபேவுக்கு பதிலாக ரிங்கு சிங்கை விளையாட வைக்கலாம். சிறப்பான இந்த வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்காவிட்டால் இந்த தொடர் முழுக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மேலும் சூர்யா கேப்டன் ஆக இருக்க வேண்டியது இல்லை. அவரை வெளியில் வைத்து கில்லை கேப்டன் ஆக்கலாம்”

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் 7 விக்கெட்.. ஆனா இங்கிலாந்து டெஸ்ட்ல வாய்ப்பே கிடைக்காமல் போக இதுதான் காரணம் – குல்தீப் யாதவ் வெளிப்படை

“ரிங்கு சிங் பந்துவீச்சு பயிற்சியை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் மிகச்சிறந்த ஃபீல்டர். பவுண்டரி எல்லையில் அற்புதமாக செயல்பட கூடியவர். மிகவும் புத்திசாலியான அவர் அழுத்தத்தின் கீழ் மிகவும் அமைதியாக இருந்து அற்புதமாக விளையாடக் கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by