தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரர் ஒருவர் காயத்தின் காரணமாக ரூல்ட் அவுட் ஆகி இருக்கிறார். இதன் காரணமாக அந்த அணிக்கு நல்ல காம்பினேஷன் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பலமான அணியாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் முதல் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று பரிதாபமான நிலையில் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதற்கு அடுத்து ஐந்து போட்டிகளில் ஐந்தையும் வென்று மொத்தம் 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்து அசத்தியிருக்கிறது.
மும்பை அணிக்கு முதல் முறை
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு எப்பொழுதும் சிறந்த வேகப் பந்து வீச்சு யூனிட் இருக்கும். இந்த முறையும் போல்ட், தீபக் சகர், பும்ரா, ஹர்திக் பாண்டியா என சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட் இருக்கிறது.
அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுழல் பந்துவீச்சு யூனிட் எப்பொழுதும் சுமாராகவே அமையும். ஆனால் இந்த முறை மிட்சல் சான்ட்னர், கரன் சர்மா மற்றும் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். மேலும் காயத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் மிஸ்டரி ஸ்பின்னர் அல்லாஹ் கசன்பர் இடம்பெறவில்லை. அவருடைய இடத்திற்கு முஜிப் ரஹ்மான் வாங்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலகிய வீரர் – மாற்று வீரர்
இந்த நிலையில் இந்த ஸ்பின் கூட்டணியில் இளம் வீரராக வந்து அசத்திய விக்னேஷ் புத்தூர் தற்பொழுது காயத்தின் காரணமாக ரூல்ட் அவுட் ஆகி இருக்கிறார். மேலும் மிட்சல் சான்ட்னர் மற்றும் கரன்சர்மா இருவருக்குமே சில காயங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஸ்பின்னர் ஒருவர் வெளியேறுவது பவுலிங் யூனிட்டில் காம்பினேஷன் அமைப்பதற்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு சிக்கல்களை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : ஒரே முடிவு.. பரிதாப தோல்வி.. இது பழைய தோனியே கிடையாது.. ஸார் நீங்க இப்படி செய்யலாமா?.. குமுறும் ரசிகர்கள்
இந்த நிலையில் இவருடைய இடத்திற்கு ரகு சர்மா என்ற லெக் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் தற்போது அணியில் இருக்கும் சீனியர் லெக் ஸ்பின்னர் கரண் சர்மாவுக்கு பேக்கப் வீரராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இருந்து லோக்கல் டோர்னமெண்ட் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு பெற்ற விக்னேஷ் புத்தூர் திடீரென வெளியேறி இருப்பது ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது.






