நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக விளையாடியது அந்த அணி விளையாடிய முந்தைய வருடங்களை விட இந்த வருடம் மிக மிக சுமாராக விளையாடியது அந்த அணியின் ரசிகர்கள் அனைவரையும் வருத்தமடைய செய்தது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு தனித்திட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தீட்டியுள்ளது. தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள காரணம்
மும்பை இந்தியன்ஸ் அணையின் தலைமை வீரர்கள் ரோஹித், இஷான் சூரியகுமார்,பும்ரா ஆகியோர் இந்திய அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் எனவே அவர்களைப் பற்றி எந்தவித பிரச்சனையும் இல்லை. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களுடைய நாட்டுக்காக விளையாடி கொண்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்கள் அனைவரும் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளை முடித்துவிட்டு ஓய்வு எடுத்து கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகள் இனி ஒரு சில மாதங்கள் இல்லை. எனவே இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி அவர்களை சிறப்பாக தயார்படுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி ஜெயவர்த்தனே தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஒரு சில வழிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எதிராக இங்கிலாந்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த போட்டியில் என்ன தொலைக்காட்சியிலும் எந்தவித வெப்சைட்டிலும் ஒளிபரப்படாது. ரசிகர்களும் இந்த போட்டியை காண வர மாட்டார்கள் இதில் எந்தவித வருமானமும் இல்லை. எனவே பிசிசிஐ தரப்பில் இதற்கான தனியாக ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்கள் பட்டியல் :
என்.டி.திலக் வர்மா, குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், மயங்க் மார்கண்டே, ராகுல் புத்தி, ரமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், பாசில் தம்பி, முருகன் அஷ்வின், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் மெத்வால், அர்ஷத் கான், அர்ஜுன் டெண்டுல்கர், தேவால் ப்ரீவிஸ்.
அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது இங்கிலாந்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் அனைவரும் கூடியவிரைவில் இங்கிலாந்துக்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.