என்னப்பா சொல்றீங்க.. மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய தலயே இல்லையா? 

0
701

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் படுதோல்வியை தழுவியது. விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில் நடப்பு சீசனில் மும்பை அணிக்கு ஆரம்பம் முதலில் சோகமாக தொடங்கி உள்ளது.

- Advertisement -

மும்பை அணியில் பலமாக கருதப்படும் பும்ரா காயம் காரணமாக விளையாடவில்லை. இதைப் போன்று ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன், தொடரை விட்டு வெளியேறி இருந்தார்.  இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் இல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை, உலக கோப்பை என பெரிய தொடர்கள் காத்திருக்கிறது. இதனால் காயம் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்காக அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடாமல் சில போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

வீரர்கள் காயம் ஏற்படுவதை தடுக்க சிலருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என பிசிசிஐ அணிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதனை மற்ற அணிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அது தம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என முடிவெடுத்துள்ள ரோஹித் சர்மா, கேப்டனாக தமிழ் சில போட்டிகளில் விளையாடாமல் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க உள்ளதாக ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

இதை அடுத்து மும்பை அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் மும்பை அணியின் சில போட்டிகளில் ரோஹித்ரமா விளையாடாமல் இருந்தாலும் தொடர்ந்து அணியுடன் பயிற்சி செய்வது, அணியுடன் பயணம் செய்வது,அணிக்கு வழிகாட்டுவது போன்ற பணிகளை ரோகித் சர்மா செய்யவும் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவின் இந்த முடிவு இந்திய அணி என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் மும்பை அணி ரசிகர்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்.