நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தங்கள் சொந்த மைதானத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது “இந்த சீசன் கிடையாது இந்த இரவு எங்களுடையதாக இல்லை. சிஎஸ்கே எல்லா துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என எல்லாமே மேலே இருந்தது”
“இங்கு 180 முதல் 190 ரன்கள் நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும். நாங்கள் முதல் 10 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அதற்குப் பிறகு எங்களால் மொமண்டத்தை கொண்டு வர முடியவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்களால் பந்தை உயரத்திற்கு அடிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே பவுலர்கள் சிறப்பாக இருந்தார்கள்”
“இந்த ஆடுகளம் ஆரம்பத்திலேயே உள்ளே வந்து வேகமாக அடித்து விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. அவர்களும் கூட நன்றாக செட் ஆன பின்பும் விருப்பப்படி விளையாட முடியாமல்தான் இருந்தார்கள். அதே சமயத்தில் எங்களுடைய பேட்டிங் யூனிட் சிறப்பாக இல்லை”
இதையும் படிங்க : மும்பையை வெளியே அனுப்பிய சிஎஸ்கே.. ருதுராஜ் கார்த்திக் சர்மா பிரில்லியன்ட் பேட்டிங்.. செட்டான பிளேயிங் லெவன்
“நாங்கள் பந்துவீச்சில் இன்னும் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் சில தீப்பந்துகளை எறிந்து இருக்க வேண்டும் போல. எங்களிடமிருந்த பவுலர்களைக் கொண்டு நாங்கள் சென்றோம். ஆனால் அவர்கள் புத்திசாலித்தனமாக விளையாடினார்கள் மொத்தத்தில் எங்களை விட சிறந்த அணியாக இருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.