கடைசி கட்டத்தில் WPL 2025.. யுபி வாரியர்ஸ் எதிரான வெற்றி.. மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் 2வது இடம்.. ஆர்சிபி பிளே ஆஃப் தகுதி பெறுமா.?

0
810

2025ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ல்16வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் யுபி வாரியஸ் அணி தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் – வோல் இணை தொடக்கம் கொடுத்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய ஹாரிஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த கிரண் நவ்கிரே டக் அவுட்டாகினார். தொடர்ந்து ஜார்ஜியா வோல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து வெளியேற, யுபி வாரியர்ஸ் அணி 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

மும்பை வெற்றி

தொடர்ந்து வந்த கேப்டன் தீப்தி சர்மா 25 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க, கடைசி நேரத்தில் வந்த சோபி எக்லஸ்டோன் 16 ரன்கள் எடுத்தார். இதனால் இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் அமீலியா கேர் 4 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்பின் 151 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் – அமீலியா கேர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில அமீலியா கேர் 10 ரன்களில் வெளியேற, பின்னர் மேத்யூஸ் – ஸிவர்பிரண்ட் இணை இணைந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதிரடியாக ஆடிய நடாலி ஸிவர்பிரண்ட் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூஸ் 46 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

புள்ளிப்பட்டியல்

இறுதியாக 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து மும்பை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. வழக்கம் போல் டெல்லி அணி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. 

இதன்பின் குஜராத் அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆர்சிபி அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் யுபி வாரியர்ஸ் அணி நீடிக்கிறது. லீக் சுற்று போட்டிகள் விரைவில் முடிவடைய உள்ள சூழலில், பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -