இரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட, எவ்வித யோசனையுமின்றி மைதான ஊழியர்களுக்கு உதவி செய்த மும்பை கேப்டன் பிருத்வி ஷா

0
167

இந்த ஆண்டு ரஞ்சி ட்ராபி தொடரின் இறுதி போட்டி தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தற்பொழுது இறுதிப்போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 134 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய மத்தியபிரதேச அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 536 ரன்கள் குவித்துள்ளது. மத்தியபிரதேச அணியில் அதிகபட்சமாக யாஷ் துபே 133 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியை விட 162 ரன்கள் முன்னிலையில் முதல் இன்னிங்சை மத்தியபிரதேச அணி முடித்துக் கொண்டது.

- Advertisement -

ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது

மத்தியபிரதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழை குறுக்கிட்டது. சமீபத்தில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நடக்க இருந்த ஐந்தாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும்.

அதேபோல மழை குறுக்கிட மைதான ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக தார்ப்பாய் எடுத்துவந்து மைதானத்தை மூடினார்கள். மைதானம் ஊழியர்களுக்கு மும்பை அணியின் கேப்டன் பிரத்வி ஷா உதவி செய்தார். அவர்களுடன் இணைந்து அந்த தார்ப்பாயை அவரும் இழுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அவர்களுக்கு உதவி செய்த புகைப்படத்தை ட்விட்டர் வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்தார் அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மும்பை அணி கேப்டன் பிருத்வி ஷா முதல் இன்னிங்சில் 47 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 44 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

போராடிக் கொண்டிருக்கும் மும்பை அணி

இரண்டாவது இன்னிங்சில் தற்பொழுது மும்பை அணி இன்று நான்கு நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் குவித்துள்ளது. 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை 5வது நாள் ஆட்டத்தில் மும்பை அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.