இந்த யு19 வீரர் தான் எதிர்கால இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப உள்ளார் – எம்.எஸ்.கே பிரசாத்

0
192
MSK Prasad about Shaikh Rasheed

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கேப்டன் கோலி ஒருநாள் தொடர்களில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரோகித் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அவரால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது காயம் குணமாகி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கியுள்ளார் ரோஹித். கேப்டன் ஆன முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி 60 ரன்கள் குவித்தார்.

கேப்டன் ரோகித் தலைமையில் தன்னுடைய முதல் போட்டியை இந்திய அணி மிகவும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இதற்கிடையே இந்திய ஜூனியர் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கண்டாய் 2018ஆம் ஆண்டு வெற்றிக்கு பிறகு இந்த முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்தியா.

- Advertisement -

முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரவிக்குமார் மற்றும் ராஜ் பாலா ஆகியோர் அதிவேகத்தில் சரிந்தது. அந்த அணியின் ஜேம்ஸ் மற்றும் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 189 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கைத் துரத்தி விளையாடிய இந்திய அணி 49 ரன்கள் எடுத்திருந்தபோது 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கூட்டணி சேர்க்க ஷேக் ரசீது மற்றும் யாஷ் துல் சிறப்பாக விளையாடி அணியை மீட்டனர்.

குறிப்பாக ஷேக் ரஷீத் ஆரம்பத்தில் பந்து ஸ்விங் போது அதை மிகவும் சிறப்பாக கணித்து விளையாடினார். 84 பந்துகளை சந்தித்து இவர் 50 ரன்கள் எடுத்தார். இந்த அடித்தளத்தை பயன்படுத்தி பின் வந்த வீரர்களான சிந்து மற்றும் ராஜ் பாவா இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றிக்கு பிறகு பேட்டி கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ஷேக் ரஷீத் வருங்காலத்தில் இந்திய அணிக்கு மூன்று வகை கிரிக்கெட்டிலும் மூன்றாவது வீரராக விளையாடும் திறன் படைத்தவர் என்று பாராட்டியுள்ளார்.

அதிக அழுத்தம் நிறைந்த இறுதிப்போட்டியில் இவர் அடித்த அழைத்ததால் தான் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த இளம் வயதிலேயே இவருக்கு இருக்கும் பொறுப்புணர்வு இவரை நிச்சயம் மிகப் பெரிய வீரராக முன்னேற்றும் என்று பல்வேறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.

- Advertisement -