ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என இந்திய முன்னாள் வீரர் மற்றும் இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் வெளிப்படையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சரியான முறையில் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தவில்லை கள வியூகத்தையும் அமைக்கவில்லை என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்கிறார்கள். மேலும் அவருடைய பேட்டிங் மிக சுமாராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ரோகித் சர்மா
இந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அவர்களை ரோகித் சர்மா சரியான நேரத்தில் சரியாக முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை. இது ஆரம்ப விமர்சனமாக இருக்கிறது.
இதற்கு அடுத்து இன்றைய நாளில் ஆரம்பத்தில் தடுமாற்றத்தில் இருக்கும் சிராஜை வைத்து பந்துவீச்சை ஆரம்பித்தது பெரிய விமர்சனமாக மாறி இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வந்த பொழுது களவியூகத்தையும் ரோகித் சர்மா சரியாக அமைக்கவில்லை எனவும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
ரோகித் சர்மா சுறுசுறுப்பாகவே இல்லை
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறும் பொழுது “அணியின் செயல் திறனில் கேப்டன்சி என்பது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. துரதிஷ்டவசமாக ரோகித் சர்மா சுறுசுறுப்பாகவும் இல்லை போராடிக் கொண்டும் இருக்கிறார். கான்ஸ்டாஸ் அவ்வளவு அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் பதினோரு ஓவர்கள் தாண்டியும் பயன்படுத்தினார்”
இதையும் படிங்க : வெறும் 20%.. விராட் கோலிக்கு இந்த தண்டனை போதாது.. அவர் இப்படிப்பட்டவர் – ரிக்கி பாண்டிங் கருத்து
“நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கும் அப்படியே வந்து சேர்ந்தார். ஆஸ்திரேலியாவில் வென்ற இரண்டு டெஸ்ட் தொடர்களை பார்த்தால் விராட் கோலி முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தினார். 36 ரன்னுக்கு ஆட்டம் இழந்த பிறகு கேப்டன் ரகானே பேட்ஸ்மேனாக சதம் அடித்து அணியை முன்னே கொண்டு வந்தார். ஆனால் ரோகித் சர்மா அதை செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.






