உலகக் கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக இந்த இருவர் செயல்பட்டால் நன்றாக இருக்கும் – எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து

0
768
MSK Prasad and Virat Kohli

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருடன் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. இதன் பிறகு இந்திய அணி புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை ரவிசாஸ்திரி பயிற்றுவித்த இந்திய அணி குவித்து இருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பெரிய கோப்பைகள் எதுவும் வெல்லவில்லை. இதனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மீது ஒரு வகையான விமர்சனம் இருந்துகொண்டே இருந்தது. தற்போது ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை இப்போதே அறிய ஆவல் பலருக்கு ஏற்பட்டுவிட்டது.

மேலும் ரவி சாஸ்திரி தானே பயிற்சியாளராக தொடர விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாலும் தற்போதைய கேப்டன் விராட் கோலியும் இந்த தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டதாலும் அடுத்த பயிற்சியாளர் மற்றும் கேப்டன் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது பிசிசிஐ. இந்த நிலையில் தற்போது நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கு மட்டும் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் தோனியை நியமித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தற்போது உலக கோப்பை தொடருக்குப் பிறகு அடுத்த பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்பொழுது பயிற்சியாளராக உலக கோப்பை தொடருக்குப் பிறகு முன்னாள் இந்திய வீரர் டிராவிட்டையும் அணியின் வழிகாட்டியாக தோனியை தொடர வைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது டிராவிட் மற்றும் தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக வந்தால் அது வரம் போன்றது என்று கூறியுள்ளார். இருவருமே அமைதியானவர்கள் என்றும் இருவருமே இளம் வீரர்களை வளர்ப்பதில் மிகவும் திறமைசாலிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்து அணிக்குள் வரவிருக்கும் பல இளைஞர்கள் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடியவர்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டிராவிட் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். உலக கோப்பை முடிந்த பிறகு டிராவிட் மட்டும் தோனி இணைந்து இந்திய அணிக்காக பயணித்தால் இந்திய அணியை யாரும் அசைக்க முடியாது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

- Advertisement -