ஐபிஎல் 2025

ஃப்ரெண்ட்ஸ் இதை செய்ய சொல்லி கூப்பிடுவாங்க.. ஆனா என் அப்பாவுக்கு பயந்து போக மாட்டேன்.. குழந்தைப் பருவம் குறித்து தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகத்தான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி தற்போது அணியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி தனது குழந்தை பருவ நினைவுகள் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

எம்எஸ் தோனியின் குழந்தைப் பருவம்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி அந்த சீசன் முதல் தற்போது சென்னை அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த சீசனில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் அவதிப்பட்டு இருந்த தோனி, இந்த சீசனில் முற்றிலும் குணமாகி தற்போது நன்றாகவே விளையாடி வருகிறார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் சற்று பின்தங்கிய நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 43 வயது ஆவதால் இந்த சீசன் மட்டுமே அவர் விளையாடுவார் என்று அனைவராலும் பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் விளையாடுவதைக் காண ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தின் இருக்கைகளை நிரப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி தனது குழந்தை பருவ நினைவுகள் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவரது தந்தை மிகவும் கண்டிப்பானவர் எனவும், அவரைக் கண்டாலே தனக்கு பயம் அதிகமாகும் என தோனி சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தந்தை மிகவும் கண்டிப்பானவர்

இது குறித்து எம்எஸ் தோனி கூறும் போது “நான் என் தந்தையை பார்த்து அப்போது மிகவும் பயந்தேன். அவர் மிகவும் கண்டிப்பான மனிதர். அவரைப் பொறுத்தவரை நான் சரியான நேரத்திற்கு வர வேண்டும். என் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அந்த விஷயத்தில் அவர் கண்டிப்பானவர். அதனால்தான் நான் இப்போது சரியாக இருக்கிறேன். அவர் எங்களை அடிக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு விஷயம் எனக்கு பயத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க:ஐபிஎல்-ல் இருக்கும் பட்லருக்கு நடந்த சோகம்.. இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.. திடீர் நீக்கம் ஏன்?

அது எவ்வளவு காலம் ஆனாலும் அந்த பயம் எனக்கு அப்படியே இருந்தது. என் நண்பர்கள் எங்கள் காலணியின் சுவர்களில் ஏறிச் செல்வார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதற்கு துணிய மாட்டேன். என் அப்பா பார்த்தால் நிலைமை என்னவாகும் என்று தெரியாது. விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றாலும் அந்த விஷயத்திற்கு நாங்கள் பயந்தோம்” என்று எம்எஸ் தோனி கூறியிருக்கிறார். தோனி மற்றும் அவரது தந்தைக்கு இடையேயான உறவு சமீபத்தில் வெளிவந்த எம்எஸ் தோனி திரைப்படத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by

Recent Posts