இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி தன்னுடைய 43 வது வயதில் ஐபிஎல் தொடரின் 18 வது சீசனில் விளையாட இருக்கின்றார். சிஎஸ்கே அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்ற தோனி, தற்போது சாதாரண வீரராக பங்கேற்கிறார்.
அது மட்டும் அல்லாமல் அணியின் நலனுக்காக தோனி தன்னுடைய சம்பளத்தையும் நான்கு கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார். இந்த சூழலில் தோனி தன்னுடைய புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தோனி, சஞ்சு சாம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐபிஎல் 2025 குறித்து தோனி கருத்து:
அப்போது தோனியிடம் அவருடைய எதிர்காலத் திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி,” நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு விளையாடவில்லை. இதனால் பல ஆண்டுகள் நான் எந்தவித சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் தான் இருக்கின்றேன்”.
” தற்போது நான் என்ன செய்கிறேன் என்றால் கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட்டை விளையாடி சில ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகின்றேன். நான் பள்ளியில் படிக்கும் போது மாலை 4 மணி தான் விளையாட்டு நேரம். அந்த நேரத்தில் நாங்கள் பொதுவாக கிரிக்கெட் தான் விளையாடுவோம்”.
சொல்வது எளிது, செய்வது கடினம்:
” ஒருவேளை மழை பெய்தால் அனைவரும் கால்பந்து விளையாடுவோம். சிறுவயதில் நான் எப்படி அப்பாவித்தனமாக கிரிக்கெட் விளையாடினேனோ, அதேபோல் தான் தற்போது விளையாட விரும்புகிறேன். ஆனால் இது சொல்வதற்கு வேண்டுமானால் ஈசியாக இருக்கலாம். செய்வது கடினம்” என்று தோனி கூறியுள்ளார்.
தோனி கடந்த சீசனை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் விளையாட தோனி முடிவெடுத்திருக்கிறார். தோனிக்கு முட்டிக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதனால் கடந்த சில காலமாக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க- முதல் மேட்ச் போச்சு.. இனி இந்திய அணியை ஜெயிக்க நான் சொல்ற இத மட்டும் பண்ணுங்க – பாக் சோயப் அக்தர் அறிவுரை
இன்னும் தோனியின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம், தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் நல்ல உடற்பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் 43 வயது உடைய தோனி 23 வயது இளைஞர் போல் காலத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.






