சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள மகேந்திர சிங் தோனி – வீடியோ இணைப்பு

0
263
MS Dhoni Atharva The Origin

பொதுவாக நாவலை எழுதும் ஆசிரியர்கள் தங்களது கதைக்கு ஏற்றவாறு படங்களை தேர்வு செய்வார்கள். நாவலைப் படிக்கும் வாடிக்கையாளர்கள் அந்த கதையை விறுவிறுப்பாக படிப்பதற்கும், அந்த கதைக்குள்ளே சென்று முழுவதுமாக அவர்கள் உணர்வதற்கும் ஒரு சில பொம்மை படங்கள் தேர்வு செய்து நாவலில் இணைப்பார்கள்.

அதுபோல் தற்பொழுது ரமேஷ் தமிழ்மணி ஆசிரியர் எழுதியுள்ள அதர்வா தி ஒரிஜின் நாவலில் ஒரு சில படங்கள் அந்த கதையின் நாயகனை குறிக்கும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த கதையின் நாயகனாக எம்எஸ் தோனியை கதாசிரியர் ரமேஷ் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

தற்பொழுது இந்த நாவலில் 150க்கும் மேற்பட்ட படங்கள் ( எம்எஸ் தோனியின் படங்கள் ) உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கதையின் நாயகன் ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் கதையை படிக்கும் வாடிக்கையாளர்கள், எம்எஸ் தோனியையே அந்த சூப்பர் ஹீரோவாக உணர்ந்து படிக்கப் போகிறார்கள்.

அந்த நாவலின் முதல் பார்வை இன்று எம் எஸ் தோனி வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. புகைப்படத்தில் எம்எஸ் தோனி ஒரு சூப்பர் ஹீரோ போல மிக அற்புதமாக காட்டப்பட்டு இருந்தார். நீண்ட தலைமுடியுடன் சற்று கோபத்துடன், கம்பீரமாக ஒரு போர்வீரரை போல எம்.எஸ்.தோனி இருந்தார்.

கதையை படிப்பவர்களுக்கு மேலும் மேலும் படிக்க வேண்டுமெனன ஆர்வம் தூண்டும்

முதல் பார்வையை வெளியிட்ட எம்எஸ் தோனி இந்த ப்ராஜெக்டில் தான் நிறைந்துள்ளது சந்தோஷமாக அதே சமயம் பரவசமாகவும் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த கதை படிக்க படிக்க விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே போகும் என்றும், கதாசிரியர் ரமேஷ் தமிழ்மணியின் இந்த முயற்சி அனைவரையும் நிச்சயம் கவரும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த நாவலை படிக்க படிக்க அடுத்தடுத்து இனி கதையில் என்ன வரும் என்கிற ஆர்வம் தானாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் எழும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

எம்எஸ் தோனி ஒரு சூப்பர் ஹீரோ போல காட்சியப்படுத்தியிருக்கும் இந்த நாவல் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த நாவலை அமேசானில் சென்று வாடிக்கையாளர்கள் படித்துக் கொள்ளலாம்.