தோனிக்குப் பின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அது இவர் தான் – தினேஷ் கார்த்திக் கருத்து

0
230
MS Dhoni and Dinesh Karthik

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓர் விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனி பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் என்பது அனைவர் அறிந்தது. அதே சமயம் பேட்ஸ்மேனாகவும் பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். சர்வதேச அளவிலும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். கில்கிறிஸ்ட், பவுச்சர் உட்பட பல ஜாம்பவான் விக்கெட் கீப்பர்கள் தோனியின் ஸ்டம்ப்பிங் திறனைப் பாராட்டியுள்ளனர். தோனி, இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இந்திய அணியின் 2 சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது, “ ரிஷப் பண்ட் அவரின் சிறந்த சாதனைகளை நோக்கிச் செல்கிறார். இந்திய அணிக்காக தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்தால் நிச்சயம் தோனிக்குப் பின் சிறந்த விக்கெட் கீப்பராக இவர் திகழ்வார். இந்திய கிரிக்கெட்டின் 2 சிறந்த விக்கெட் கீப்பர்களாக இவர்கள் விளங்குவர் ” என்றார். இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறாத விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தன்னலமின்றி வேறு இரண்டு வீரர்களை சிறந்தவர்களாக தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இளம் வீரர் ரிஷப் பண்ட், இந்திய அணிக்காக 2017ஆம் ஆண்டு களமிறங்கினார். இந்த 5 ஆண்டிலேயே பல கிரிக்கெட் வல்லுனர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென ஆட்டத்தின் போக்கையே தலைகீழாய் மாற்றக் கூடிய திறன் கொண்டவர் என்றெல்லாம் புகழ்ந்தனர். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்டர் கவாஸ்கர் டிராபியை வாங்கிக் கொடுத்துள்ளார். எத்தனை காலம் ஆனாலும் இந்த ஒன்று நிச்சயம் பெரிதாக பேசப்படும்.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்தில் அதிவேக அரை சதம் விளாசி கபில் தேவ்வின் 30 வருட சாதனையை முறியடித்தார். 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். இலங்கை டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்ற முக்கியக் காரணமாக விளங்கிய ரிஷப் பண்ட் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆரம்பத்தில் பண்ட் சொதப்பிய போது “ தோனி தோனி ” என்று கூவிய அதே ரசிகர்கள் இன்று பண்ட்டின் பெயரை உசர்கிக்கின்றனர். அதுதான் அவரின் வளர்ச்சி.