கேப்டன்சி விஷயத்தில் எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஒரே மாதிரிதான் – ஜடேஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மொயின் அலி

0
76

நடந்து முடிந்த 2022 டாட்டா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சுமாராக தான் விளையாடியது. தொடரின் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா கேப்டனாக தலைமை தாங்கினார். தொடர் தோல்விகளை பெற்று வந்த இடையில் ஜடேஜா தனது கேப்டன் பொறுப்பை மீண்டும் மகேந்திரசிங் தோனியிடமே ஒப்படைத்தார். ஒரு வீரராக தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இந்த முடிவை அவர் எடுத்தார்.

வருங்காலத்தில் சிறந்த தலைவராக ரவிந்திர ஜடேஜா வலம் வருவார்

- Advertisement -

சென்னை அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி ரவீந்திர ஜடேஜா குறித்து ஒரு சில விஷயங்களை தற்போது நம்மிடம் கூறியுள்ளார். ரவீந்திர ஜடேஜா நீங்கள் நினைக்கும் விதத்தில் மோசமான கேப்டன் கிடையாது அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. எம்எஸ் தோனி தலைமையிலும் நான் விளையாடி இருக்கிறேன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலும் நான் விளையாடி இருக்கிறேன் அந்த அனுபவத்தில் நான் இதை கூறுகிறேன்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் ஒரு அணியாக இணைந்து சரியாக விளையாடவில்லை அதுவே தொடர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா கேப்டனாக சிறப்பாக செயல்பட கூடியவர் நிச்சயமாக வருங்காலத்தில் ஒரு தலைவராக அவர் வலம் வருவார்.

என்னை பொருத்தவரையில் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணியை தலைமை தாங்குவதில் ஒரே மாதிரி தான்.மிகவும் அமைதியான மன நிலையில் இருப்பார்கள். தங்கள் வீரர்களுக்கு மிகவும் விசுவாசமாக, புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்று மொயின் அலி ரவிந்திர ஜடேஜா குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -