தோனிக்கு ICC Hall of fame கவுரவம்.. ஹைடன், அம்லா உள்ளிட்ட 7 வீரர்களுக்கு கிடைத்த பெருமை

0
127

சர்வதேச கிரிக்கெட்டில் பல வாழ்நாள் சாதனைகளை செய்திருக்கும் வீரர்களுக்கு ஐசிசி Hall of fame என்ற ஒரு மாபெரும் கௌரவம் வழங்கப்படும். ஒரு வீரர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் பிறகு தான் இந்த கௌரவத்தை பெற முடியும் என்பது முதல் தகுதி. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தோனி நெகிழ்ச்சி:

இந்த நிலையில் தற்போது ஐசிசி Hall of fame கவுரவம்  கிடைத்திருக்கிறது. இந்திய அணிக்காக 17266 ரன்கள், விக்கெட் கீப்பராக 829 ஆட்டம் இழப்புகளும் தோனி செய்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்காக 2011 உலகக்கோப்பை, 2007 டி20 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை  தோனி கைப்பற்றி இருக்கிறார். தோனி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற கௌரவத்தை பெற்றது.

- Advertisement -

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி,” ஐசிசி ஹால் ஆப் பேம் என்ற கௌரவம் தமக்கு கிடைத்திருப்பதை என் வாழ்நாள் பெருமையாக நினைப்பதாக கூறியுள்ளார். பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் உடன் தமது பெயரும் இனி நினைவு கூறப்படும் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நினைப்பை நான் என்றென்றும் போற்றுவேன்” என்றும் தோனி கூறியிருக்கிறார்.

ஹைடன், அம்லாவுக்கும் கவுரவம்:

சச்சின், டிராவிட் ,கவாஸ்கர், சேவாக் உள்ளிட்ட வீரர்களுக்கு பிறகு இந்த கௌரவத்தை பெறும் ஒன்பதாவது இந்திய வீரர் தோனி ஆவார். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், ஹால் ஆப் பேம் கௌரவம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயாஸ் பேச்சு.. மக்கள் என் பெயரை கொண்டாட வைக்கனும் என கருத்து

இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஆன ஹஷிம் அம்லா மற்றும் கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோருக்கு இந்த ஐசிசி விருது கிடைத்திருக்கிறது. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான டேனியல் விட்டோரிக்கு ஹால் ஆப் பேம் கௌரவம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை பாகிஸ்தான் வீராங்கனை சானா மிர் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை சாரா டைலர் ஆகியோருக்கும் ஹால் ஆப் பேம் விருது கிடைத்திருக்கிறது.

- Advertisement -