இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் ஜோ ரூட்டை விட விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்கள் எடுத்திருக்கிறார். ஜோ ரூட் 153 டெஸ்ட் போட்டிகளில் 13006 ரன்கள் எடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய வித்தியாசம் இருந்த பொழுதும் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன் என மான்டி பனேசர் கூறியிருக்கிறார்.
விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன்
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். முறியடிப்பதற்கு மிகவும் கடினமான சாதனையாக சர்வதேச கிரிக்கெட்டில் இது பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு குறைந்து வருவதால் இனி இந்த சாதனையை யாரும் முறியடிப்பது கடினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை முறியடிக்க கூடிய வாய்ப்பில் ஜோ ரூட் மட்டுமே இருக்கிறார்.
இந்த நிலையில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று பனேசர் கூறும் பொழுது “நான் விராட் கோலி என்றுதான் சொல்லுவேன். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவருடைய குணாதிசயம் மற்றும் அவருடைய ஆரா என அவர் மேஜைக்கு கொண்டு வரும் விஷயங்கள் அற்புதமானவை. இதனால் விராட் கோலியைதான் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லுவேன்”
ஆண்டர்சன்-பும்ரா யார் சிறந்தவர்?
இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து பேச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பும்ரா இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு “இதற்கு என்னுடைய பதில் ஆண்டர்சன்தான். எல்லாச் சூழ்நிலையிலும் அவர் செயல்பட்ட விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க : பும்ரா விஷயத்தில் இந்திய அணி எடுத்தது சரியான முடிவு.. இவர் அதுக்கு செட் ஆக மாட்டார் – ஆஸி ரிக்கி பாண்டிங் கருத்து
“மேலும் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் புதிய இளம் கேப்டன் வில்லுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். தற்போது அவரை கேப்டனாக கொண்டு வந்திருப்பதால் அவருடைய எண்கள் சிறப்பாக மாறும் என்றும் நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






