குஜராத் ஐபிஎல் 2025-ல் என்னை எடுக்கலனா கவலை இல்லை.. காரணம் இதுதான் – முகமது ஷமி பேட்டி

0
112

2023 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் போது, கணுக்கால் காயம் காரணமாக வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வலைகளில் மீண்டும் பந்து வீசத் தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சமி, ஐபிஎல்லில் தான் விளையாடிய அணிகள் குறித்தும், தனது மனநிலை குறித்தும் சில வெளிப்படையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தற்போது திகழ்ந்துவரும் முகமது சமி, கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 உலக கோப்பை தொடரின் போது காயமடைந்தார். பும்ரா, சிராஜ், சமி என இறுதிப்போட்டி வரை சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்த கூட்டணி எதிர்பாராத விதமாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதிப் போட்டியோடு கணுக்களில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய சமி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும், டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியாமல் போனது.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், மீண்டும் வலை பயிற்சிகளில் பந்து வீச தொடங்கி இருக்கிறார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டும் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக இரண்டு சீசன்களில் விளையாடி வரும் சமி இதுவரை 48 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அடுத்து வரும் மெகா ஆக்ஷனில் குஜராத் அணி என்னை திரும்ப அணிக்குள் எடுக்காவிட்டாலும், எனக்கு கவலை இல்லை என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஷுபங்கர் மிஸ்ராவுடனான உரையாடலின் போது சமி கூறியதாவது “எனக்கு எந்த அணியும் இப்போது மனதில் இல்லை. நான் டெல்லி அணியால் தக்க வைக்கப்படவில்லை. நான் பஞ்சாப் அணிக்காக 60 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். ஆனால் அவர்களும் என்னை வெளியேற அனுமதித்தனர். அதற்குப் பிறகு நான் குஜராத் அணியில் இணைந்தேன். இரண்டு சீசன்களாக இந்த அணிக்கு இதுவரை 48 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன்.

அடுத்த சீசனில் குஜராத் என்னை தக்க வைக்காவிட்டாலும், எனக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை. என்னை எந்த அணி வாங்குகிறதோ அந்த அணிக்காக என்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்வேன். குஜராத் அணிக்கு சிறந்த பங்களிப்பாளர்கள் வேண்டுமானால், சிறந்த வீரர்களை தேர்வு செய்வார்கள்.ஆனால் அவர்களுக்கு சிறந்த முகங்கள் வேண்டுமானால் மாடல்களை தேர்வு செய்யட்டும்.

இதையும் படிங்க:டிராவிட் ரோகித் விராட் கிடையாது.. டி20 உலக கோப்பை பைனலில் இவர்தான் நம்பிக்கை கொடுத்தார் – அக்சர் படேல் பேட்டி

ஐபிஎல் 2024 குஜராத் அணி தோல்வி அடைந்ததற்கான காரணம், ஹர்திக் பாண்டியா அந்த அணியில் இல்லை. மேலும் காயம் காரணமாக நானும் விளையாடவில்லை. மற்ற இரண்டு சிறந்த வீரர்களும் அப்போது நல்ல பார்மில் இல்லை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது நிச்சயமாக எந்த அணியும் பாதிப்படையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -