பும்ரா இல்லனா என்ன? சாம்பியன்ஸ் கோப்பையில் ஷமி இடம் உறுதி.. விஜய் ஹசாரே கோப்பையில் அபார பந்துவீச்சு

0
40

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா பங்கேற்பது சந்தேகமாகியுள்ள நிலையில், மற்றொரு ஸ்டார் வீரரான ஷமி பந்து வீசு அசத்தியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷமி கடைசியாக 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

சமி அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஷமி, கடந்த ஒரு ஆண்டுகளாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த சூழலில் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்தார்.

- Advertisement -

ஷமி அபார பந்துவீச்சு

இதற்காக ரஞ்சிக் கோப்பை சையது முஸ்தாக் அலி தொடர் போன்ற போட்டிகளில் விளையாடினார். ஆனால் அப்போது ஷமிக்கு முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டதால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ குழு அனுப்ப மறுத்துவிட்டனர். இதன் காரணமாக ஷமி இல்லாமல் பும்ரா மட்டும் தனி ஆளாக போராடிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த தருணத்தில் ஷமி தற்போது இந்திய அணிக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கியுள்ள ஷமி இன்று ஹரியானா அணிக்கு எதிரான கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அபாரமாக பந்து வீசினார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. இதில் ஹரியானா அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி  தன்னுடைய அபார பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சமி 10 ஓவருக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 61 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் உறுதி:

ஷமி ஐந்து அகல பந்துகளை வீசினார். இதன் மூலம் ஹரியானா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும், சமி 61 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதனால் ஷமி, நிச்சயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவார் என தெரிகிறது. இதனை அடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்கால் அணியில் அபிஷேக் போரெல் 57 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனார்.

இதனால் அந்த அணி 43 ஒரு ஓவரில் 226 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சமி இன்றைய ஆட்டத்தில் வெறும் இரண்டு ரன்கள் தான் சேர்த்தார். ஹரியானா அணியில் இடம் பெற்றிருக்கும் சுழற் பந்துவீச்சாளர் வட்ஸ் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -