இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆரம்பித்து தற்போது வரையில் இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவர் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் பெற்றார். இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அவர் செய்வது தெரியவில்லை
இந்த நிலையில் இடையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பிறகு ஒட்டுமொத்தமாக எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் இருந்து இந்திய அணியில் முகமது ஷமி நீக்கப்பட்டது குறித்து தெளிவில்லாமல் இருந்து வருகிறது. மேலும் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் வெளியில் பேசப்படுகிறது.
இதுகுறித்து அகர்கர் கூறும் பொழுது “முகமது ஷமி குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவர் அதிக கிரிக்கெட் விளையாட வில்லை என்று நான் நினைக்கிறேன். ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக ஒரு போட்டியிலும் துலிப் டிராபியில் ஒரு போட்டியிலும் விளையாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக கிரிக்கெட் விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
என் கையில் இல்லை
இது பற்றி முகமது ஷமி பேசும்பொழுது “நான் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது என்னுடைய கையில் இல்லை. அது இந்தியத் தேர்வுக் குழு தலைவர் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கைகளில் இருக்கிறது. அவர்கள் என்னை தேர்வு செய்து எனக்கு விளையாட அதிக நேரம் கொடுக்க முடிவு செய்வது அவரது கைகளில்தான் இருக்கிறது. ஆனால் நான் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன்”
இதையும் படிங்க : அந்த 1 பந்துக்காக.. இவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுறார்.. இது ஏன்னு எனக்கு புரியல.. ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி
“என்னுடைய பயிற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய உடல் தகுதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. நான் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். ஏனென்றால் மைதானத்தில் இருந்து நீங்கள் நீண்ட காலம் வெளியே விலகி இருக்கும் பொழுது, நீங்கள் அதிக உழைப்பை கொடுக்க வேண்டியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






