லெய்செஸ்ட்டர்ஷிர் அணிக்கு விளையாடும் புஜாராவை டக் அவுட் ஆக்கி விட்டு, அவரிடமே ஓடிச்சென்று மன்னிப்பு கேட்ட முகமது ஷமி – வீடியோ இணைப்பு

0
275

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி கவுண்டி தொடரில் விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறது. லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் இந்திய வீரர்கள் புஜாரா ரிஷப் பண்ட் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஸ்ணா இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து டிக்லேர் செய்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரீகர் பரத் 70* ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தற்போது விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது ஷமி இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்த புஜாரா

லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் விளையாடிய புஜாரா 5 பந்துகளை பிடித்து எந்தவித ரன்னும் அடிக்காமல் இருந்தார். பின்னர் முகமது ஷமி வீசிய ஆறாவது பந்தில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். 6 பந்துகள் பிடித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் புஜாரா டக் அவுட் ஆனார்.

இருவரும் இணைந்து ஒரே அணியில் விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது வெவ்வேறு அணியில் விளையாடி கொண்டு வருகின்றனர். புஜாராவை டக் அவுட் ஆக்கிய பின் முகமது ஷமி ஓடிச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சமாதானம் செய்து வழி அனுப்பி வைத்தார்.முகமது ஷமி புஜாராவிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அற்புதமாக பந்து வீசி வரும் முகமது ஷமி லெய்செஸ்ட்டர்ஷிர் அணி கேப்டன் ஆன சாமுவேல் எவன்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.