நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானம் பெரிது என்பதோடு ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். எனவே ஆறு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் இந்தியாவுக்கு போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இசான் கிசான் இடம் தோற்ற பாகிஸ்தான்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி ஏழு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிசான் வெறும் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இல்லாமல் போனது. இதனால் வெற்றிக்கு தேவையான ரன்களை இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து இந்திய பவுலர்களும் மிகவும் வசதியாக பந்து வீசினார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் சீனியர் வீரர்களின் செயல்பாடு சுமாராக இருந்தது.
இவர்களை நீக்க வேண்டும்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் பாபர் அசாம், சதாப் கான் மற்றும் ஷாகின் அப்ரிடியின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. இந்த நிலையில் இது குறித்து முகமது யூசுப் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : இஷான் கிஷான், சூர்யானு பேசிட்டே இவரை மறந்து விடுறோம்.. முக்கியமான போட்டியில் சத்தமே இல்லாம சம்பவம் பண்றாரு – இர்பான் பதான்
இது குறித்து முகமது யூசுப் பேசும்பொழுது ” பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோருடைய நேரம் பாகிஸ்தான் டி20 அணியில் முடிந்து விட்டது. தற்போது நமக்கு தேவை புதிய இளமையான திறமையாளர்கள்தான். பலவீனமான அணிகளுக்கு எதிராக பெறும் வெற்றிகள் நமக்கு தேவையில்லை” என்று கூறி இருக்கிறார்.






