“2வது டெஸ்ட்.. வீட்ல டிவில பார்த்தேன்.. அப்பதான் இதை கண்டுபிடிச்சேன்” – சிராஜ் வெற்றி ரகசியம்

0
492
Siraj

தற்போது மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியில் பாதியில் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாத நிலை இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் என இருந்த இங்கிலாந்து அணியை 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 196 ரன்களை இரண்டு விக்கெட் இழப்புக்கு எடுத்து, மொத்தமாக 322 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறார்கள்.

இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னும் எட்டு விக்கெட் கைவசம் இருக்க மேற்கொண்டு 180 ரன்கள் சேர்க்கும் என்றால், இந்த டெஸ்ட் போட்டியை வெல்லுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இந்திய அணியின் கைகளில் வந்துவிடும்.

இந்திய அணியின் இன்றைய பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு 21.1 ஓவர் பந்துவீசி, 84 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்ற, அதற்கு அடுத்து மிக முக்கியமான விக்கெட்டான போப் விக்கெட்டை ரோகித் சர்மாவை வற்புறுத்தி ரிவ்யூ எடுக்க வைத்து சிராஜ் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசிக்கட்டத்தில் வந்த பேட்ஸ்மேன்களை அடிக்க விடாமல் முகமது சிராஜ் 3 விக்கெட் கைப்பற்றி, இங்கிலாந்து அணி 319 ரன்களில் சுருள முக்கிய காரணமாக இருந்தார். ரேகான் அகமத் மற்றும் ஆண்டர்சன் இருவருக்கும் சிறப்பான யார்க்கர் வீசி வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : 322 ரன் இந்தியா முன்னிலை.. இங்கிலாந்து பாஸ்பாலை வேஸ்ட்பால் ஆக்கிய ஜெய்ஸ்வால்.. கில்லும் அசத்தல்

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்ப பதில் அளித்த முகமது சிராஜ் “நான் இரண்டாவது டெஸ்ட் ஓய்வில் இருந்த பொழுது, வீட்டில் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்தேன். அந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பாய் சிறப்பான யார்க்கர்களை வீசி விக்கெட் கைப்பற்றினார். அதைப் பார்த்த நான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் இந்த போட்டியில் யார்க்கர்கள் வீசினேன் விக்கெட்டுகள் கிடைத்தது” எனக் கூறியிருக்கிறார்.