ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெற்று விளையாடமாட்டார் – காரணத்தை விளக்கியுள்ள ஆசிஷ் நெஹ்ரா

0
119

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டம் வென்றது. குஜராத் அணியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர்கள் மத்தியில் முகமது ஷமி மிக அற்புதமாக விளையாடினார். பவர்ப்ளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என அனைத்திலும் மிக அற்புதமாக அவர் செயல்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மொத்தமாக 20 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் அவரது சேவை இந்தியாவுக்கு நிச்சயம் தேவை என்கிற எண்ணத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் மிகப்பெரிய குண்டை தற்பொழுது ஆஷிஷ் நெஹ்ரா வீசியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் – ஆசிஸ் நெஹ்ரா

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஷயங்களை வைத்து பார்க்கையில் நிச்சயமாக அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க மாட்டார். அவரது திறமை என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும் இருப்பினும் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் அவர் விளையாடமாட்டார். ஆனால் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற உலக கோப்பை தொடரில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார். மேலும் பேசிய ஆசிஷ் நெஹ்ரா ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் அவர் விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பதால் நிச்சயமாக ஜஸ்பிரித் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக இருப்பார். ஹர்ஷால் பட்டேல் சிறப்பாக பந்து வீசி வருகிறார். குறிப்பாகச் ஸ்லோவர் பந்துகளை வீசுவதில் நல்ல கைதேர்ந்த வீரராக இருக்கிறார். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் அவருடைய ஸ்லோவர் பந்துகள் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

புவனேஸ்வர் குமார் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவரும் இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆஷிஷ் நெஹ்ரா கூறும் படி, முகமது ஷமி இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினமான விஷயம்.